பருப்பு அடை--சமையல் குறிப்புகள்,
சத்தான உணவு செய்முறை பருப்பு அடை தேவை பச்சைப்பயறு -1கப் துவரம் பருப்பு-1கப் உளுத்தம் பருப்பு-1கப் பெருங்காயம்-சிறிது ...

சத்தான உணவு செய்முறை
தேவை
துவரம் பருப்பு-1கப்
உளுத்தம் பருப்பு-1கப்
பெருங்காயம்-சிறிது
தேங்காய் எண்ணெய்-1கப்
பச்சை மிளகாய்-4
கொத்துமல்லி இலை-1/2கொத்து
உப்பு-ருசிக்குத் தக்க அளவு
பருப்பு வகைகளை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீர் விட்டு இவற்றை அரைத்தெடுக்கவும். கொத்துமல்லி இலை, மிளகாய் இவற்றைச் சிறு துண்டங்களாக நறுக்கி, உப்பும் சேர்த்து அரைத்த மாவில் கலக்கவும். கலந்த மாவானது இட்லி மாவைப் போன்று இருக்கும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும், சிறிது எண்ணெய் விட்டு, ஒரு தேக்கரண்டி மாவை விடவும். ஒருபுறம் வெந்தவுடன் மறுபுறம் திருப்பி எடுக்கவும். இதை சட்னி இல்லாமலேயே சாப்பிடலாம்.
Post a Comment