மேங்கோ கட்லெட்---வாசகிகள் கைமணம்
மேங்கோ கட்லெட் தேவையானவை: மாம்பழம் - 6, வெல்லம் - கால் கிலோ, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், குங்குமப்பூ - சிறிதளவு, நெய் - 2 டீஸ்பூன். ...

செய்முறை: மாம்பழங்களைத் தோல் சீவி, துண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது நீர் விட்டு கூழ்போல் கரைக்கவும். கடாயில் வெல்லத்தைப் போட்டு, நீர் சேர்த்து கம்பி பதத்துக்கு பாகு காய்ச்சவும். அடுப்பை நிதானமாக எரியவிட்டு மாம்பழக் கூழைச் சேர்த்து அடி பிடிக்காமல் கிளறவும். பாகும் கூழும் ஒன்றாகக் கலந்து கெட்டியாகும்போது ஏலக்காய்த்தூள், நெய், குங்குமப்பூ சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.
மேங்கோ கட்லெட்: மையாக அரைத்த தேங்காய் விழுதும் சேர்த்து செய்தால்... மணமும், ருசியும் கூடும்.
Post a Comment