சர்க்கரை நோயாளிகளுக்குப் புது பாலிசி! --இன்ஷூரன்ஸ்
சர்க்கரை நோயாளிகளுக்குப் புது பாலிசி! கா ப்பீட்டுத் துறையில் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் ...

''ஒன்றுக்கு மேற்பட்ட பாலிசிகளை வைத்திருக்கலாம் என்றால், எப்படி க்ளைம் பெறுவது?''
''ஒருவர் எத்தனை பாலிசிகள் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். அது ஒரு பிரச்னையே இல்லை. ஆனால், க்ளைம் வாங்கும்போது... ஏதாவது ஒரு பாலிசியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நீங்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனையில் எந்த பாலிசிக்கு 'பணம் இல்லா சிகிச்சை’ கிடைக்குமோ, அந்த பாலிசியை முதலில் பயன்படுத்துங்கள். ஒருவேளை அந்த பாலிசியில் இருந்து முழுவதும் க்ளைம் வாங்கிவிட்டால், அடுத்து இருக்கும் பாலிசியைப் பற்றி யோசிக்கலாம்.''
''இன்னும் சில மாதங்களில், என் மகளுக்குத் திருமணம் நடக்க இருக்கிறது. இப்போதைக்கு என் குடும்பம் முழுமைக்குமான பாலிசி எடுத்திருக்கிறேன். திருமணத்துக்குப் பிறகு என்ன செய்வது?''
''என் அப்பாவுக்கு வயது 64, அம்மாவுக்கு 58. நானும் என் மனைவியும் 30 வயதுக்கு நெருக்கமாக இருக்கிறோம். எங்கள் அனைவருக்கும் குடும்பம் முழுமைக்குமான ஒரே பாலிசி (ஃப்ளோட்டர்) கிடைக்குமா?''
''ஃப்ளோட்டர் பாலிசி கிடைக்குமா என்பது ஒரு பிரச்னையே இல்லை. ஆனால், ஃப்ளோட்டர் பாலிசியில் யாருடைய வயது அதிகமாக இருக்கிறதோ, அவர்களை அடிப்படையாக வைத்துதான் ப்ரீமியம் கணக்கிடப்படும். அப்படிப் பார்க்கும்போது நால்வருக்குச் சேர்த்து மொத்தமாக ஃப்ளோட்டர் பாலிசி எடுப்பது அதிக செலவு பிடிக்கும். பொதுவாக 60 வயதுக்கு மேலே இருப்பவர்களை மூத்தக் குடிமக்களாக வைத்திருக்கின்றன காப்பீட்டு நிறுவனங்கள். அதனால், உங்கள் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தனித்தனியாகப் பாலிசி எடுங்கள். உங்கள் இருவருக்கும் சேர்த்து ஒரு ஃப்ளோட்டர் பாலிசியும் எடுத்துக்கொள்ளுங்கள்.''
''சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு பாலிசி கிடைக்குமா?''
''இப்போது புதிதாக ஒரு பாலிசி வந்திருக்கிறது. ஆனால், அந்த பாலிசியை சர்க்கரை நோயாளிகள் மட்டும்தான் எடுத்துக்கொள்ள முடியும். 26 வயது முதல் 65 வயது வரையிலானவர்களுக்கு மட்டும் இந்த பாலிசி கிடைக்கும். சர்க்கரை நோயினால் ஏற்படும் விளைவுகளுக்கு மட்டுமே இந்த பாலிசியில்
''விபத்துக் காப்பீட்டுக்கும் மருத்துவக் காப்பீட்டுக்கும் என்ன வித்தியாசம்?''
''மருத்துவக் காப்பீட்டில் ஏதாவது மருத்துவச் சிகிச்சை தேவைப்படும்போது, க்ளைம் வாங்கிக்கொள்ள முடியும். விபத்துக் காப்பீட்டில் விபத்தின் தீவிரத்துக்கு ஏற்ப நமக்கு பாலிசி தொகையில் இருந்து பணம் கிடைக்கும். பாலிசி எடுத்திருந்தவர் விபத்தில் இறந்துபோக நேரிட்டால், அவரைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கு பாலிசி தொகை முழுவதுமே கிடைக்கும். ஆனால், தலைக்கவசம் அணியாமல் பயணித்தல், சிவப்பு விளக்கு எச்சரிக்கையை மீறி பாதையைக் கடந்து செல்லுதல், மூடி இருக்கும் ரயில்வே கேட்டைக் கடந்து செல்லுதல், குடி போதையில் வாகனம் ஓட்டுதல்... போன்ற தருணங்களில் விபத்து நேர்ந்தால், அது எந்த வகையான பாலிசியாக இருந்தாலும் க்ளைம் கிடைக்காது.''
Post a Comment