தக்காளி சூப்--உடலுக்கு வலிவு தரும் சூப்கள்,
தேவையான பொருள்கள்: தக்காளி = 5 வெங்காயம் = 1 மிளகுத்தூள் = தேவையான அளவு பூண்டு = 6 பல் வெண்ணெய் = 2 தேக்கரண்டி சோள மாவு = 1 த...

https://pettagum.blogspot.com/2012/07/blog-post_2773.html
தேவையான பொருள்கள்:
- தக்காளி = 5
- வெங்காயம் = 1
- மிளகுத்தூள் = தேவையான அளவு
- பூண்டு = 6 பல்
- வெண்ணெய் = 2 தேக்கரண்டி
- சோள மாவு = 1 தேக்கரண்டி
- உப்பு = தேவையான அளவு
- கொத்தமல்லி இலை = தேவையான அளவு
- தக்காளி, வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை சிறியதாக நறுக்கி கொள்ளவும்.
- வாணலியில் வெண்ணெய் விட்டு உருகியதும் அதில் பூண்டு போட்டு வதக்கி பிறகு வெங்காயம் சேர்த்து இரண்டும் நன்றாக வதங்கியதும் தக்காளி கலந்து நன்றாக மசியும் வரை வதக்கி பிறகு தேவைக்கேற்ப நீர் விட்டு 15 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளவும்.
- பிறகு வடிகட்டிய நீரில் சோள மாவை கலந்து சிறிது நீர் சேர்த்து மீண்டும் கொதிக்க வைத்து பின்னர் மிளகுத்தூள், கொத்தமல்லி இலை தூவி சூடாக பரிமாறவும்.
- இந்த சூப் உடலுக்கு வலிமை தரக்கூடியது. இதை வாரத்திற்கு இரண்டு நாட்கள் வைத்து குடித்தால் உடல் வலிமையுடன் பலம் பெறும். இந்த தக்காளி சூப் விரைவாக ஜீரணமாக கூடியது.
- உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் ஃபாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், ஃபாஸ்ப்போரிக் அமிலம் ஆகியவை தக்காளிப் பழத்தில் இருக்கின்றன. தக்காளியில் அதிக அளவில் மக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், செம்பு, சிறிது கால்சியம் ஆகியவை உள்ளன. மேலும் வைட்டமின் C, வைட்டமின் B மற்றும் வைட்டமின் D ஆகியவை காணப்படுகிறது.
- இதனால் உடல் பலவீனம், சோம்பல் ஆகியவற்றை நீக்கும். எலும்புகள் மற்றும் பற்களுக்கு பலத்தை தரும். இதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கலாம். கபம், சளியை வெளியேற்றும். மலச்சிக்கலை குறைத்து ஜீரண சக்தியை அளிக்கும்.
- வெங்காயத்தில் கால்சியம், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாது கூறுகள் அதிகம் உள்ளது. இதனால் ஜலதோஷம், ஆஸ்துமா, சுவாச பிரச்சனைகள் மற்றும் இருமல் போன்ற நோய்கள் குறைகிறது.
Post a Comment