பூசணிக்காய் பருப்பு --சமையல் குறிப்புகள்
பூசணிக்காய் பருப்பு தேவையான பொருட்கள்: சாம்பல் பூசணிக்காய் - கட் செய்தது ஒரு தட்டு முழுவதும். (நான் வாங்கிய துண்டு 800கிராம் இருந்த...

பூசணிக்காய் பருப்பு
சாம்பல் பூசணிக்காய் - கட் செய்தது ஒரு தட்டு முழுவதும்.
(நான் வாங்கிய துண்டு 800கிராம் இருந்தது)
பெரிய வெங்காயம் - 1
பெரிய தக்காளி -1
மல்லி,கருவேப்பிலை -சிறிது
பச்சை மிளகாய் -2-4
தேங்காய் - 4டேபிள்ஸ்பூன்
பருப்பு - 100கிராம்
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
சீரகத்தூள் - அரைடீஸ்பூன்
பூண்டு பல் - 6
கடுகு,உ.பருப்பு -தலா ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - 2டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல் -2
உப்பு - தேவைக்கு
பருப்புடன்,மஞ்சள் தூள்,சீரகத்தூள்,பூண்டு பல் ,தேவைக்கு தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுக்கவும். பூசணிக்காயை கட் செய்து அலம்பி வைக்கவும்.
வெந்த பருப்புடன்,நறுக்கிய தக்காளி,வெங்காயம்,பூசணிக்காய்,மல்லி இலை சேர்க்கவும்.உப்பு சேர்க்கவும். தேங்காய் துருவலுடன் மிளகாய் சேர்த்து பரபரவென்று அரைத்து கொள்ளவும். அரைத்த தேங்காயை பூசணிக்காய் பருப்புடன் சேர்க்கவும்,குக்கரை மூடி மீண்டும் ஒரு விசில் விடவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,கடுகு,உ.பருப்பு, மிளகாய் வற்றல், கருவேப்பிலை போட்டு வெடிக்கவும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிவற வதக்கி தாளித்ததை வெந்த பூசணி பருப்பில் கொட்டவும்.கலந்து விடவும்.
Post a Comment