அழகுக்கு அழகு சேர்க்க...
அழகுக்கு அழகு சேர்க்க.. . முகம் மட்டுமின்றி கழுத்து, கை, கால், மூட்டு பாதங்கள் போன்ற அனைத்தையும் முறையாக பராமரித்து அழகாக வைத்துக்கொள்...

முகம் மட்டுமின்றி கழுத்து, கை, கால், மூட்டு பாதங்கள் போன்ற அனைத்தையும் முறையாக பராமரித்து அழகாக வைத்துக்கொள்ள வேண்டும். தண்ணீரில் சிறிதளவு உப்பையும், கடுகுத்தூளையும் கலக்கவும். அதில், கால் பாதங்களை அரை மணி நேரம் முக்கி வையுங்கள். நாலைந்து நாட்கள் இவ்வாறு செய்தாலே, கால் நன்றாக சுத்தமாகி, வெடிப்புகளும் நீங்கும். கைகளையும் இந்த நீரில் முக்கி, அழகு பெறலாம்.
நகங்களில் கலர் பூசுவதற்கு முன், நகங்களை நன்றாக வெட்டவும். பின் நகங்களுக்கும், விரலுக்கும் மசாஜ் செய்து, நக பாலீஸ் போடுங்கள். சில பெண்களுக்கு, கை, கால் மூட்டுப் பகுதிகளில், சொரசொரப்பாக அழகு இல்லாமல் இருக்கும். ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு , பால், மஞ்சள் தூள் ஆகியவற்றை கலந்து பஞ்சில் முக்கி, கை, கால், மூட்டு பகுதிகளில் தேயுங்கள்.
இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால், மூட்டுகளில் இருக்கும் கறுப்பு புள்ளிகளும் சொரசொரப்பு தன்மையும் நீங்கும்.
Post a Comment