கோகனட் மில்க் கேக் -- வாசகிகள் கைமணம்
கோகனட் மில்க் கேக் தேவையானவை: தேங்காய் துருவல், சர்க்கரை - தலா ஒரு கப், முந்திரிப் பருப்பு - 15, பால் பவுடர் - 5 ...

செய்முறை: முந்திரிப் பருப்பை நீரில் ஊற வைக்க வும். ஊறிய முந்திரியுடன் தேங்காய் துருவல் சேர்த்து, மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும். கடாயில் கொஞ்சமாக தண்ணீர் விட்டு சர்க்கரையை சேர்க்கவும். அது கரைந்தவுடன் அரைத்த விழுதை சேர்த்து நன்றாகக் கிளறவும். கொதி வந்தவுடன் அடுப்பை 'சிம்’மில் வைத்து கைவிடாமல் கிளறவும்.
பொங்கி வரும்போது பால் பவுடர் மற்றும் நெய் சேர்த்து நன்றாகக் கிளறவும். பக்கங்களில் ஒட்டாமல் திரண்டு வரும்போது ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியவுடன் வில்லைகள் போடவும்.
Post a Comment