ஜவ்வரிசி ஜிகர்தண்டா---சமையல் குறிப்புகள்!
ஜவ்வரிசி வயிற்றுப் புண்ணிற்கு அருமருந்தாகும். அல்சர், வயிறு எரிச்சல் உள்ளவர்கள் ஜவ்வரிசிப் பால் அல்லது ஜிகர்தண்டா செய்து அடிக்கடி குடித்தா...

தேவையானவை
பால் - 1 டம்ளர்
ஜவ்வரிசி – 2 மேசைக் கரண்டி
பாதாம் பிஸின் – ஒரு தேக்கரண்டி
ரூ ஆப்சா - 2 மேசைக் கரண்டி
ஐஸ்கிரீம் – ஒரு குழிக்கரண்டி
சர்க்கரை – தேவைக்கு
பிஸ்தா பிளேக்ஸ் – அலங்கரிக்க
செய்முறை
பாதாம் பிசினை இரவே ஊற வைக்கவும்.
ஜவ்வரிசியைப் பத்து நிமிடம் ஊற வைத்து, பாலுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
வெந்ததும் ஆற வைத்து அத்துடன் ஊறிய பாதாம் பிசின், மற்றும் ரூஆப்சா எசன்ஸையும், தேவைக்குச் சர்க்கரையும் சேர்த்துக் கலக்கி, குளிர்சாதனப் பெட்டியில் ஒரு மணி நேரம் வைக்கவும். குடிக்கும் போது ஐஸ்கிரீம் மற்றும் பிஸ்தா பிளேக்ஸ் சேர்த்துக் குடிக்கவும்.
சும்மா குளு குளுன்னு இருக்கும். ஒரு முறை செய்து சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிடணும் போல் இருக்கும். சுவைத்து மகிழுங்கள், தவறாமல் உங்கள் கருத்துக்களை பதியுங்கள்.
Post a Comment