சீரண லேகியம் --கை மருந்துகள்-3
சீரண லேகியம் தேவையான பொருட்கள்: சுக்கு - 25 கிராம் சித்தரத்தை - 10 கிராம் கண்டந்திப்பிலி - 10 கிராம் ...

- சுக்கு - 25 கிராம்
- சித்தரத்தை - 10 கிராம்
- கண்டந்திப்பிலி - 10 கிராம்
- அரிசித்திப்பிலி - 10 கிராம்
- ஏலக்காய் - 10 கிராம்
- இலவங்கப்பட்டை - 10 கிராம்
- சோம்பு - 40 கிராம்
- வெல்லம் - 250 கிராம்
- கிராம்பு - 5 கிராம்
- மிளகு - 50 கிராம்
- இஞ்சி - 25 கிராம்
- சீரகம் - 20 கிராம்
- சாத்துக்குடி - 1 எண்ணம்
- நெய் - 1 தேக்கரண்டி
- நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி
- தேன் - 1தேக்கரண்டி
2. வாணலியைச் சூடாக்கி தனித்தனியாக எல்லாப் பொருட்களையும் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
3. சூடாக்கி வறுத்த அனைத்தையும் இடித்துப் பொடியாக்கவும். தேவையான அளவு தூளாக்கிக் கொள்ளவும்.
4. இஞ்சியை சிறிது தண்ணீர் விட்டு அரைத்துச் சாறு எடுக்கவும்.
5. சாத்துக்குடியைப் பிழிந்து வடிகட்டிக் கொள்ளவும்.
6. வெல்லத்தை அடுப்பில் வைத்துத் தண்ணீர் விடாமல் கரைத்து வடிகட்டி எடுக்கவும்.
7. வெல்லச்சாறில் தேன், இஞ்சிச்சாறு, சாத்துக்குடிச் சாறு போன்றவைகளைக் கலந்து கொள்ளவும்.
8. இந்தச்சாற்றில் அரைத்து வைத்த பொடிவகைகளை சிறிது சிறிதாகத் தூவிக் கொண்டே கிளறவும்.
9. கலவை தளர்வாக இருக்கும் போது அடுப்பில் இலேசான சூட்டில் நெய்யும் எண்ணெய்யும் விட்டுக் கிளறவும்.
10. தொட்டால் ஒட்டிக் கொள்ளாமல் இருக்கும் பதத்திற்கு வந்தால் இறக்கி நன்றாகக் கிளறி வைக்கவும்
1 comment
வணக்கம்
சீரண லேகியம், செயல்முறையில், தேன் எப்போது சேர்க வேண்டும்.
வெல்லத்தை அடுப்பில் வைத்துத் தண்ணீர் விடாமல் கரைத்து வடிகட்டி எடுக்கவும், எனக் குறிப்பு உள்ளது. தண்ணீரை பயன்படுத்தாமல் எதில் கரைக்க வேண்டும். இஞ்சி & சாத்துக்குடி சான்றுகளை, வெல்லத்தைப் கரைக்கப் பயன்படுத்தலாமா?
நன்றி
முனைவர் சந்திரசேகரன்
Post a Comment