சூப் வகைகளை தயாரித்து உடனே சூடாக உண்பது உடலுக்கு சுறுசுறுப்பையும் ஆரோக்யத்தையும் அளிக்கும்.
தேவையான பொருட்கள்:
முட்டைகோஸ் 225 கிராம்
வெள்ளை பூசணிக்காய் : 225 கிராம்
வெங்காயம் : 3
உருளைக்கிழங்கு : 2
சோள மாவு : தேவைக்கேற்ப
வெண்ணெய் : 1 தேக்கரண்டி
உப்பு, மிளகுத்தூள் : தேவைக்கேற்ப
செய்முறை:
காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் வெண்ணெயை போட்டு அடுப்பில் வைத்து, சிறிது சோம்பு சேர்த்து தாளிக்கவும்.
பிறகு பொடியாக நறுக்கிய முட்டைகோஸ், பூசணிக்காய், வெங்காயம், உருளைக்கிழங்கு முதலியவைகளை போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு ஒரு கப் தண்ணீர் சேர்த்து 20 நிமிடம் வேக விடவும். நன்கு வெந்ததும், சிறிது சோள மாவை தண்ணீரில் கரைத்து சூப்பில் ஊற்றி கிளறி விடவும்.
சரியான அளவிற்கு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, கொத்துமல்லி தூவி சூடாக பரிமாறவும். |
Post a Comment