மறந்து போன மருத்துவ உணவுகள்-3 - உணவே மருந்து

உ ணவுக் கலப்படம், செயற்கை வண்ணம்.... என தற்போது நாம் சமைத்துச் சாப்பிடும் உணவுகளில் பெரும்பாலானவை உடலுக்குத் தீங்கைத்தான் விளைவிக்கின்றன. ...

ணவுக் கலப்படம், செயற்கை வண்ணம்.... என தற்போது நாம் சமைத்துச் சாப்பிடும் உணவுகளில் பெரும்பாலானவை உடலுக்குத் தீங்கைத்தான் விளைவிக்கின்றன. உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் சில 'மறந்துபோன மருத்துவ உணவு’ வகைகள் இங்கே....


பிரண்டைத் துவையல்
தேவையானவை: முற்றாத பிரண்டை - 50 கிராம், மிளகு - 20, பச்சை மிளகாய் - 3, உரித்த சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி, நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முதலில் பிரண்டையில் உள்ள நாரை நீக்கி, நெய்விட்டு வதக்கவும். பிரண்டை நன்றாக வதங்கியதும் பிற பொருட்களையும் அதனுடன் சேர்த்து லேசாக வதக்கி, துவையலாக அரைக்கவும். சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும்.
மருத்துவப் பயன்: குடலில் உள்ள  கிருமி கள் நீங்கும். உடற்பருமன் குறையும். நரம் புத் தளர்ச்சி, எலும்புத் தேய்மானம் குண மாகும். மாதவிலக்கை ஒழுங்குபடுத்தும்.

வெந்தயக் கீரை தோசை
தேவையானவை: தோசை மாவு - அரை கிலோ, சீரகம் - 25 கிராம், சோம்பு - அரை தேக்கரண்டி, பூண்டு - 4 பல், வெந்தயக் கீரை - 100 கிராம், எண்ணெய், உப்பு, மஞ்சள் தூள் - சிறிதளவு.   
செய்முறை: சீரகம், சோம்பு, பொடியாக நறுக்கிய பூண்டு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சிறிது எண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கிக்கொள்ளவும். சூடு ஆறியதும் நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த விழுதுடன் உப்பு சேர்த்து தோசை மாவுடன் நன்றாகக் கலக்கி, தோசை வார்க்கவும். அதன் மேல் நறுக்கிய வெந்தயக் கீரையைத் தூவி, வெந்ததும் மறு பக்கம் திருப்பிப் போட்டு எடுக்கவும்.   
மருத்துவப் பயன்: இரும்பு மற்றும் கால்சியம் நிறைந்தது. எலும்புகளைப் பலப்படுத்தும். வயிற்றுப் பூச்சிகளை அகற்றும். கெட்ட கொழுப்பைக் குறைக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவு.


உளுந்துப் பொடி தேவையானவை:
உளுத்தம் பருப்பு - கால் கிலோ, காய்ந்த மிளகாய் - 10, சீரகம் - 5 கிராம், காய்ந்த கறிவேப்பிலை - 25 கிராம், ஓமம் - 10 கிராம், பெருங்காயம் - 5 கிராம்.
செய்முறை:
அனைத்துப் பொருட்களையும் பொன்னிறமாக வறுத்துப் பொடியாக அரைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியை சாதத்தில் நெய் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.
மருத்துவப் பயன்:
உடல் மெலிவானவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு சிறந்த ஊட்டச் சத்து உணவு. சிசு வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்களும் இதில் நிறைந்து இருப்பதால், கர்ப்பிணிகள் சாப்பிட ஏற்றது. கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் பிரச்னைகளுக்கு நல்ல பலன் தரும்.
கறிவேப்பிலைக் கொழுக்கட்டை
தேவையானவை: கறிவேப்பிலை - 2 கைப்பிடி, பச்சரிசி மாவு - கால் கிலோ, கருப்பட்டி - 100 கிராம், சீரகம், மிளகு - தலா அரை தேக்கரண்டி, மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி, ஏலக்காய் - 6, சுக்கு - ஒரு துண்டு, தேங்காய் - அரை மூடி.
செய்முறை: சீரகம், மஞ்சள் தூள், மிளகு, சுக்கு ஆகியவற்றை வெறும் வாணலியில் இளஞ்சிவப்பாக வறுத்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். தேங்காயைத் துருவிக்கொள்ளவும். ஏலக்காயைப் பொடித்துக்கொள்ளவும். கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கருப்பட்டியைப் பாகு காய்ச்சி, மற்ற பொருட்களுடன் சேர்த்து பச்சரிசி மாவில் கலக்கவும். பின்னர் கொழுக்கட்டையாகப் பிடித்து இட்லித் தட்டில் வேகவைத்து எடுக்கவும்.
மருத்துவப் பயன்:  சர்க்கரை நோய், எலும்புத் தேய்மானம், தைராய்டு பிரச்னைகளுக்குக் கை கண்ட மருந்து. உடல் பலவீனம், வலி, அசதி, சோர்வை நீக்கி சுறுசுறுப்பு தரும். ஆவியில் வேகவைத்து எடுப்பதால், எளிதில் ஜீரணமாகும்.

Related

உணவே மருந்து 303790674485539615

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement


Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item