மட்டன் மசாலா--சமையல் குறிப்புகள்
மட்டன் மசாலா தேவையான பொருட்கள்: ஆட்டுக்கறி - 500 கிராம். பெரிய வெங்காயம் - 100 கிராம் தக்காளி - 150 கிராம்...
- ஆட்டுக்கறி - 500 கிராம்.
- பெரிய வெங்காயம் - 100 கிராம்
- தக்காளி - 150 கிராம்
- மிளகாய் - 30 கிராம்
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- தனியாத் தூள் - 1 தேக்கரண்டி
- கரம் மசால் தூள் - 1/2 தேக்கரண்டி
- தயிர் - 100 மி.லி
- இஞ்சி - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
- நல்லெண்ணெய் - தேவையான அளவு
- மல்லித்தழை - தேவையான அளவு
2. ஒரு பாத்திரத்தில் இறைச்சியைப் போட்டு, எண்ணெய் விட்டு வேக வைக்கவும்.
3. தனியாத்தூள், கரம்மசால் பொடி, தயிர் ஆகியவற்றைக் சேர்க்கவும்.
4. கறியை நன்றாகத் தண்ணீர் விடாமல் வேக வைக்கவும்.
5. வெங்காயம், மிளகாய், தக்காளி, மல்லித்தழை, இஞ்சி இவற்றைப் பொடியாக நறுக்கவும். இவையனைத்தையும் ஒன்றாகப் போட்டு சிறிது எண்ணெய்யில் தாளித்து வைக்கவும்.
6. இந்தத் தாளிசத்தை வெந்து கொண்டிருக்கும் கறியில் ஊற்றிக் கடைசியில் மல்லித்தழையை மேலாகப் போட்டு இறக்கவும்.
சப்பாத்தி, பூரி, புரோட்டா, கோதுமைத் தோசை போன்றவைகளுக்கு வைத்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.
Post a Comment