பொட்டேடோ மீல்மேக்கர் ரேஞ்ச் --வாசகிகள் கைமணம்
பொட்டேடோ மீல்மேக்கர் ரேஞ்ச் தே வையானவை: ஒரே அளவுடைய உருளைக்கிழங்கு - 10, மீல்மேக்கர் - 100 கிராம், வெங்காயம் - 200 கிராம்,...

இட்லி மாவு - ஒரு பெரிய கப், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெந்நீரில் மீல்மேக்கரை சில நிமிடங்கள் ஊற வைத்து பிழிந்து மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். உருளைக் கிழங்கை குக்கரில் வேக வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும் தோல் உரித்து, குறுக்காக முக்கால் பாகம், கால் பாகம் என இரண்டு வடிவத்தில் நறுக்கிக் கொள்ளவும். முக்கால் பாகமாக உள்ள உருளைக்கிழங்கின் நடுப்பகுதியில் ஸ்பூன் மூலம் தொன்னை போல சுரண்டி எடுத்து விடவும்.
மிக்ஸியில் வெங்காயம், பூண்டை விழுதாக அரைக்கவும். கடாயில் நெய், சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயம் - பூண்டு விழுதை வதக்கவும். பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி... பிறகு தனியாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும். அதனுடன் பொடித்து வைத்துள்ள மீல்மேக்கர், உப்பு, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து வதக்க... பூரணம் ரெடி!
பொட்டேடோ மீல்மேக்கர் ரேஞ்ச்: வெங்காயம், தக்காளிக்குப் பதிலாக முந்திரி, பாதாம் போன்ற பருப்புகளைப் பொடித்துச் சேர்த்தால்.... சுவையும் அதிகமாகும்; குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
Post a Comment