இறால் பிரியாணி..சமையல் குறிப்புகள்
தேவையானவை: இறால் - 200 கிராம் இறால் தலை - 100 கிராம் தயிர் - 3 மேசைக்கரண்டி வெங்காயம் - மூன்று பட்டை,லவங்கத் தூள் - கால் தேக்கரண்டி ஏ...

இறால் - 200 கிராம்
இறால் தலை - 100 கிராம்
தயிர் - 3 மேசைக்கரண்டி
வெங்காயம் - மூன்று
பட்டை,லவங்கத் தூள் - கால் தேக்கரண்டி
ஏலக்காய்த் தூள் - இரண்டு சிட்டிகை
பிரியாணி மசாலா - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியாத் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
நெய், எண்ணெய் - அரை கப்
கொத்து மல்லி, புதினா - சிறிதளவு
பழுத்த சிவப்பு மிளகாய் - இரண்டு
இஞ்சி, பூண்டு அரைத்தது - ஒரு தேக்கரண்டி
சாதம் தயாரிக்க:
தரமான பாசுமதி அரிசி - 400 கிராம்
பிரியாணி இலை - இரண்டு
ஷாஜீரா - அரை தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - கால் தேக்கரண்டி
சூடான பால் - ஒரு மேசை கரண்டி
குங்குமப்பூ - 6 இதழ்
செய்முறை:
தயிரில் செய்வதால் இறால் வேக ரொம்ப நேரம் எடுக்காது. ரொம்ப சீக்கிரமாக தயாரித்து விடலாம்.
இறாலை தோலெடுத்து, தலையையும் ஆய்ந்து கழுவி வைக்கவும்.(இது தான் கொஞ்சம் கஷ்டமான வேலை) தலையையும் சேர்த்து செய்வதால் இன்னும் கூடுதல் ருசி கிடைக்கும்.
குங்குமப்பூவை சூடான பாலில் ஊற வைக்கவும்.
வெங்காயத்தை நீள வாக்கில் அரிந்து வைக்கவும்.
தயிரில் பட்டை மற்றும் கிராம்புப் பொடி,மிளகாய்த் தூள் , உப்பு, ஏலக்காய்த் தூள், தனியாத் தூள், போட்டு நன்கு கலக்கி வைக்கவும்.
அடுப்பில் வாயகன்ற வாணலியை காய வைத்து எண்ணை மற்றும் நெய்யை ஊற்றி, சூடாக்கி வெங்காயத்தைப் போட்டு நன்கு பொன் முறுவலாக வதக்கவும்.
அடுத்து அரைத்த இஞ்சி பூண்டு , பாதி கொத்துமல்லி புதினா தழைகளைப் போட்டு நன்கு வதக்கவும்.
இஞ்சி பூண்டு வாடை போனதும் மசாலா கலக்கிய தயிர் கலவை, அதைத்தொடர்ந்து இறால் சேர்த்து நன்கு வதக்கி சிறிது நேரம் மசாலாக்களை ஒரு சேர கொதிக்க விடவும், தீயின் தணலை குறைத்து வைக்கவும்.
மற்றொரு அடுப்பில் சாதம் வடிக்க உலையை கொதிக்கவிடவும்.
தண்ணீருடன் பிரியாணி இலை , ஷாஜீரா, மீதி உள்ள கொத்துமல்லி புதினா, கரம் மசாலாத் தூள் இவையனைத்தையும் சேர்த்து கொதிக்க விடவும்.
உலை கொதித்ததும் அரிசியை கழுவித் தட்டி முக்கால் பதத்தில் வடிக்கவும்.
கெட்டியான இறால் கலவையில் அரிசியை தட்டி சமப்படுத்தவும்.
குங்குமப்பூ கலவையை மேலே ஊற்றி 20 நிமிடம் தம்மில் விடவும்.
சுவையான ஜிங்கா தயிர் பிரியாணி ரெடி.
சிறுநீரகத்தில் கற்கள் இருக்கும் பிரச்சினை இருப்பவர்கள் தக்காளி பயன்படுத்த மாட்டார்கள். அவர்களும் இது போல் தயாரித்து சாப்பிடலாம்.
பிரியாணியுடன் வெங்காய தயிர்ப்பச்சடி இன்னும் சுவையைக் கூட்டும்.
Post a Comment