சம்மர் ஸ்பெஷல் முலாம் - தர்பூசணி ஜூஸ் குந்தளா ரவி டயட்டீஷியன் தேவையானவை: தோல் சீவி, விதை நீக்கப்பட்ட தர்பூசணி, ம...
சம்மர் ஸ்பெஷல் முலாம் - தர்பூசணி ஜூஸ்
குந்தளா ரவி
டயட்டீஷியன்
தேவையானவை: தோல் சீவி, விதை நீக்கப்பட்ட தர்பூசணி, முலாம் பழத் துண்டுகள் - தலா ஒரு கப்.ஐஸ்கட்டி, தேன் - தேவையான அளவு.
செய்முறை:
தர்பூசணி, முலாம்பழம், தேன் மூன்றையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து,
ஜூஸாக எடுத்துக்கொள்ளவும். ஐஸ் கட்டிகள் சேர்த்து அருந்தலாம்.
பலன்கள்: தர்பூசணி,
முலாம் இரண்டும் உடலுக்குக் குளுமையைத் தரக்கூடியவை. மலச்சிக்கல் நீங்க,
ஜீரண மண்டலம் சீராகச் செயல்பட, வயிற்றில் அமிலத்தன்மை அதிகமாவதைத் தடுக்க,
முலாம்பழம் உதவுகிறது. மேலும் பாஸ்பரஸ், கால்சியம், தாமிரம், மக்னீசியம்,
மாங்கனீசு, துத்தநாகம் உள்ளிட்ட தாது உப்புகள், வைட்டமின் ஏ, சி, ஈ, கே,
ஃபோலிக் அமிலம், ஃபோலேட், பீட்டா கரோட்டீன் நிறைவாக உள்ளன. உடலில்
நீர்ச்சத்து கிடைக்கவும், வறண்ட சருமத்தைப் பொலிவாக்கவும், நோய் எதிர்ப்பு
சக்தி அதிகரிக்கவும் இந்த ஜூஸ் அருந்தலாம்.
நார்ச்சத்து இருப்பதுடன், குறைந்த கலோரி உள்ளது என்பதால், உடல் எடையைக்
குறைக்க இந்த ஜூஸைப் பருகலாம். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவு இருப்பதால்,
வளர்சிதை மாற்றம் சீராக நடக்க உதவும். ரத்த அழுத்தம் சீராகவும், மன
அழுத்தம் நீங்கவும், இதய நோய்களில் இருந்து தப்பிக்கவும் இந்த ஜூஸை
அடிக்கடி அருந்தலாம். இளம் வயதிலேயே முதுமைத் தோற்றம் அடைவதைத் தடுக்கவும்,
முடி வளர்ச்சிக்கும் உதவும். சர்க்கரை நோயாளிகள், சர்க்கரை சேர்க்காமல்
மருத்துவர் பரிந்துரைப்படி, அளவாக எடுத்துக்கொள்ளலாம். காலை, மாலை, இரவு என
எந்த வேளையிலும் எடுத்துக்கொள்ளலாம். ஐஸ் கட்டிகள் மூலமாகக் கிருமிகள்
உடலில் பரவாமல் இருக்க, வீட்டிலேயே நன்றாகக் கொதிக்கவைத்து, காய்ச்சி,
வடிகட்டிய நீரை ஆறவைத்து, ஐஸ்கட்டிகளாக்கிப் பயன்படுத்தவும். சைனஸ், சளி
பிரச்னை உள்ளவர்கள் முலாம், தர்பூசணி ஆகியவை அலர்ஜி இருக்கும்பட்சத்தில்
இந்த ஜூஸைத் தவிர்க்கவும்.
Post a Comment