லஞ்ச்வகைகள்!
லஞ்ச் ! மோர் ரசம் தேவையானவை: புளித்தத் தயிர் - அரை கப் தண்ணீர் - 2 கப் உப்பு - தேவையான அளவு தாளிக்க: கடுகு - 1 டீஸ்பூன் சீர...
புளித்தத் தயிர் - அரை கப்
தண்ணீர் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 1
கறிவேப்பிலை - ஒரு ஈர்க்கு
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - 2 டீஸ்பூன்
அரைக்க :
வறுக்காத வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் (உரித்தது) - 2
பூண்டு - 2 பல்
சிவப்பு மிளகாய் - 3
தேங்காய்த்துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்
மஞ்சள்த்தூள் - கால் டீஸ்பூன்
தயிரைக் கடைந்து வைத்துக் கொள்ளுங்கள். அரைக்க வேண்டிய பொருட்களைத் தேவையான அளவு தண்ணீர் விட்டு, பேஸ்டாக அரைத்துக் கொள்ளுங்கள். இதனை தயிரில் கலந்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கடைந்து கொள்ளுங்கள். இந்த மோர் ரசம், திக்கான சாம்பார் போல இருக்க வேண்டும். அதற்கேற்ப தயிரில் தண்ணீரை ஊற்றுங்கள். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியதைப் போட்டு தாளித்து தயிரில் சேருங்கள். நீங்கள் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு இதை செய்து வைத்தால், தாளித்தவைகள் எல்லாம் இறங்கி ரசம் சாப்பிட அமிர்தமாக இருக்கும். சாதம் உருளைக்கிழங்குடன் சேர்த்து சாப்பிட பிரமாதமாக இருக்கும்.
தயிர் - 1 கப்
கடலைமாவு - கால் கப்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள்த்தூள்- அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள்- ஒரு டீஸ்பூன்
தூளாக்கப்பட்ட வெல்லம் - 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
தேங்காய்த் துருவல் - சிறிதளவு
தாளிக்க:
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 4 முதல் 5 இலைகள்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டு - 2
பச்சைமிளகாய் - ஒன்றை நான்காக வெட்டிக் கொள்ளுங்கள்.
கொத்தமல்லித்தழை - அலங்கரிக்க
தயிரையும் கடலைமாவையும் ஒரு கடாயில் சேர்த்து, கூடவே இரண்டு அல்லது மூன்று கப் தண்ணீர் சேர்த்து நன்கு அடித்து வைத்துக் கொள்ளுங்கள். கடாயை அப்படியே அடுப்பில் வைத்து, இதில் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள் மற்றும் வெல்லம் ஆகியவற்றை ஐந்து முதல் ஏழு நிமிடம் வரை வைக்க வேண்டும்.
அடுப்பில் மற்றொரு கடாயை வைத்து தாளிக்கக் கொடுத்தவற்றைச் சேர்த்து தாளித்து அப்படியே கொதித்துக் கொண்டிருக்கும் கலவையில் சேருங்கள். கிரேவி நன்கு கொதித்ததும் தேங்காய்த் துருவலைத் தூவி கிச்சடி அல்லது சாதத்துடன் பரிமாறுங்கள்.
பாஸ்மதி ரைஸ் - ஒரு கப்
வேக வைத்த உருளைக்கிழங்கு - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சைப் பட்டாணி- அரை கப்
மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் - 2
நெய் அல்லது எண்ணெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
அரைக்க:
புதினா இலைகள் - அரை கப்
பச்சைமிளகாய் - 3
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
இஞ்சி - 2 சிறு துண்டுகள்
பூண்டு - 2 பல்
உப்பு - தேவையான அளவு
தேங்காய்ப்பால் அல்லது சாதாரண பால் - கால் கப்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மீடியம் சைஸ் க்யூப்களாக வெட்டிக் கொள்ளுங்கள். வெங்காயத்தை மெல்லிய வட்டமான ஸ்லைஸ்களாக வெட்டி கொள்ளுங்கள். அரிசியைக் கழுவி இரண்டு கப் தண்ணீரில் அரை மணி நேரம் ஊற விடுங்கள். அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சீரகம், வெங்காயம், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்து லைட் பிரவுனாக நிறம் மாறும் வரை வதக்குங்கள்.
அரைக்கக் கொடுத்தவற்றை மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். ஏற்கெனவே வெந்து கொண்டிருக்கும் பச்சைப் பட்டாணிக் கலவையில் அரைத்த மசாலாவைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள். ஊற வைத்த அரிசியை நீர் வடித்து, இதில் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்குங்கள். இரண்டு கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க ஆரம்பித்ததும் மூடி போட்டு சிம்மில் வையுங்கள். 20 முதல் 25 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சூடான பிரியாணி ரெடி. ரைத்தாவோடு பரிமாறினால், மிகவும் சுவையாக இருக்கும்.
சீரகம் - 2 டேபிள்ஸ்பூன்
புளித்தண்ணீர்- ஒரு எலுமிச்சை சைஸ் புளியின் சாறு
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 5 அல்லது 6 பல்
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள்த்தூள் - கால் டீஸ்பூன்
வெல்லம் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
வெந்தயம் - கால் டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானதும் அதில் எண்ணெய் விடாமல் சீரகத்தை வாசனை வரும் வரை வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து பொடியாக்கிக் கொள்ளுங்கள். புளியை ஒரு கப் நீரில் பத்து நிமிடம் ஊறவைத்து, அதன் ஜூஸை எடுத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தை மெல்லிய ஸ்லைஸ்களாக நறுக்கி, பூண்டுப்பல்லைத் தோல் உரித்தும் வைத்துக் கொள்ளுங்கள்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு சேர்த்து பொரிய விடுங்கள். இதில் வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை பெருங்காயம் சேர்த்து வதக்குங்கள்.
நறுக்கிய வெங்காயம், தோல் உரித்த பூண்டுப்பல்லைச் சேர்த்து மூன்று நிமிடம் வதக்குங்கள். சாம்பார் பொடி மற்றும் மஞ்சள்த்தூளைச் சேர்த்து மீண்டும் வதக்கி, புளித்தண்ணீரை ஊற்றி கொதிக்க விடுங்கள். பச்சை வாசனை போனதும் அரைத்த சீரகப்பொடி, தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். நன்கு கொதித்ததும் அடுப்பை மிதமாக்கி வெல்லத்தைச் சேர்த்து ஐந்து முதல் எட்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கிப் பரிமாறுங்கள். ஒவ்வொரு முறையும் சீரகத்தை வறுத்து அரைத்து உபயோகப்படுத்தி, இந்தக் குழம்பை வைத்தால் 2 முதல் 3 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
பாஸ்மதி ரைஸ் - 2 கப்
ஆரஞ்சு ஜூஸ் - 1 கப்
தேங்காய்ப்பால் - 1 கப்
மெல்லிய வட்டமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
வேக வைத்த பச்சைப்பட்டாணி -அரை கப்
சின்ன சைஸ்களாக நறுக்கிய கேரட், ஃப்ரெஞ்ச் பீன்ஸ் - 1 கப்
நறுக்கிய புதினா - கால் கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - கால் கப்
பச்சைமிளகாய் - 3
நறுக்கிய இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய பூண்டு - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
முந்திரிப் பருப்பு - 5
பட்டை - அரை இஞ்ச் நீளமுள்ள பீஸ்
பிரியாணி இலை - 2
சோம்பு - அரை டீஸ்பூன்
கிராம்பு - 4
அன்னாசிப்பூ - 1
பாஸ்மதி அரிசியைக் கழுவி இரண்டு கப் தண்ணீர் சேர்த்து முக்கால் மணி நேரம் ஊற வையுங்கள். மிக்ஸியில் பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள். கனமான அடிபாகமுள்ள பேனை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் மற்றும் நெய்யைச் சேர்த்து கரம் மசாலா பொருட்களையும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்குங்கள். இதில் முந்திரி மற்றும் வெங்காயத்தையும் சேர்த்து அவை நிறம் மாறும் வரை வதக்குங்கள்.
இஞ்சி-பூண்டு, பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள். கூடவே கேரட், பீன்ஸ், புதினா, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை வரிசையாகச் சேர்த்து வதக்குங்கள். பிறகு ஊற வைத்த அரிசியை தண்ணீர் இறுத்து சேர்த்து அவற்றில் உள்ள ஈரம் போக வதக்குங்கள். இத்துடன் தேங்காய்ப்பால், அரிசி ஊற வைத்த தண்ணீர் சேர்த்து நான்கு நிமிடம் கிளறுங்கள். இதில் பச்சைப்பட்டாணி , ஆரஞ்சு ஜூஸ், உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கிளறுங்கள். அடுப்பை மிதமாக்கி மூடி போட்டு இருபது முதல் இருபத்தி ஐந்து நிமிடம் வரை வேக வைத்து மூடியைத் திறந்தால் ஆரஞ்சு புலாவ் வாசனை ஆளைத் தூக்கும்.
ஸ்பிரிங் ஆனியன்ஸ் - 300 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று (கொஞ்சம் பெரியதாக நறுக்கிய துண்டுகள்)
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
துருவிய தேங்காய், பொட்டுக்கடலை, காய்ந்த மிளகாய், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்். ஸ்பிரிங் ஆனியனை நன்கு கழுவி பச்சை மற்றும் வெள்ளைப் பகுதிகளைத் தனித்தனியே சற்று பெரியதாக நறுக்கிக் கொள்ளுங்கள். வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு ஸ்பிரிங் ஆனியனின் வெள்ளைப் பகுதி, நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நிறம்
மாறும் வரை வதக்குங்கள்.
பிறகு ஸ்பிரிங் ஆனியனின் பச்சைப்பகுதியைச் சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்குங்கள். இத்துடன் அரைத்த தேங்காய் கலவையைச் சேர்த்து இரண்டில் இருந்து மூன்று நிமிடம் வரை வதக்கினால், ஸ்பிரிங் ஆனியன் பொரியல் ரெடி. சாதம் அல்லது ரொட்டியுடன் சேர்த்துப் பரிமாறவும்.
பனீர் - ஒரு கப்
பாஸ்மதி அரிசி - ஒரு கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய பூண்டு - 2 பல்
கேரட் - 1
பீன்ஸ் - 5
ஸ்பிரிங் ஆனியன் வெள்ளைப் பகுதி - கால் கப்
ஸ்பிரிங் ஆனியனின் பச்சைப் பகுதி - அரை கப்
உப்பு, மிளகு - தேவையான அளவு
ஆலிவ் எண்ணெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
வெந்நீரில் பனீரைப் போட்டு ஐந்து நிமிடம் கழித்து தண்ணீரை வடித்து மிக பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பாஸ்மதி அரிசியைக் கழுவி இரண்டு கப் தண்ணீரில் இருபது நிமிடம் ஊற வையுங்கள். அதே தண்ணீரோடு அரிசியை குக்கரில் சேர்த்து அடுப்பில் வைத்து மூடி போட்டு மூன்று விசில் வரும் வரை வேக வையுங்கள். பிரஷர் போனதும் சாதத்தை எடுத்து தனியே ஆற வையுங்கள்.
காய்கறிகளைப் பொடியாக நறுக்கி கொள்ளுங்கள். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்குங்கள். ஸ்பிரிங் ஆனியனின் நறுக்கிய வெள்ளைப்பகுதி, கேரட், பீன்ஸ் மற்றும் துளி உப்பு சேர்த்துக் கிளறி வேக வையுங்கள். இத்துடன் நறுக்கிய பனீரைச் சேர்த்து காய்கறிகளோடு பனீர் சேரும் வரை வதக்குங்கள். இதில் வெந்த பாஸ்மதி அரிசியை சேர்த்து மெதுவாகக் கிளறுங்கள். இல்லையென்றால் அரிசி உடைந்துவிடும். இறுதியாக உப்பு, மிளகுத்தூள், ஸ்பிரிங் ஆனியன் பச்சைப் பகுதியைச் சேர்த்து தூவி கிளறி அடுப்பை அணைத்து காரமான கிரேவியோடு பரிமாறுங்கள்.
பெரிய வாழைக்காய் - 1
பெரிய வெங்காயம் - 1
மீடியம் சைஸ் தக்காளி - 2
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒன்றரை டீஸ்பூன்
மஞ்சள்த்தூள் - அரை டீஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு ஈர்க்கு
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வாழைக்காயை இரண்டாக நறுக்கி ஆவியில் ஐந்து நிமிடம் வேக வைத்து ஆற வைக்கவும். பிறகு தோலுரித்து வட்டமாக நறுக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
அடுப்பில் வாணலியை வைத்து ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம், நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்குங்கள். இதில் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை போகும்வரை வதக்கி, தக்காளி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்குங்கள். இதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்த்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து, வாழைக்காயைச் சேர்த்து மெதுவாகக் கிளறுங்கள். இனி அடுப்பை மிதமாக்கி மூடி போட்டு ஐந்து நிமிடம் வேக விட்டு அடுப்பை அணைத்து இறக்கிப் பரிமாறுங்கள்.
தோல் உள்ள உளுந்து - ஒரு கப்
சிவப்பு பீன்ஸ் - கால் கப்
பொடியாக நறுக்கிய மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் - ஒன்று
பொடியாக நறுக்கிய தக்காளி - 2
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 2
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் - ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள்த்தூள் - அரை டீஸ்பூன்
தண்ணீர் - 3 முதல் 4 கப்
ஃபிரெஷ் க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய்/எண்ணெய்/ நெய் -
3 டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - அலங்கரிக்க
சுத்தம் செய்த உளுத்தம் பருப்பு, சிவப்பு பீன்ஸ் இரண்டையும் முந்தைய நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளுங்கள். குக்கரில் 3 கப் நீர் சேர்த்து ஊறவைத்த உளுந்து, பீன்ஸை தண்ணீர் இறுத்து குக்கரில் உப்பு சேர்த்து, எட்டு முதல் 10 விசில் வரும் வரை (மசிக்கும் பதம் வரும் வரை) வேக விடுங்கள்.
அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் வெண்ணெய் விட்டு அதில் வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, பெருங்காயம் சேர்த்து வதக்கி, தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பின்னர் இதனுடன் அனைத்துத் தூள்களையும் சேர்த்துக் கலந்து உளுந்துக் கலவையையும் சேர்க்கவும்.
இறுதியாக ஃபிரெஷ் க்ரீமை சேர்த்து மிதமான தீயில் இரண்டு நிமிடம் வேக விட்டு அடுப்பை அணைத்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறுங்கள். இதனை ஜீரா புலாவ், நாண், ரைஸ், ரொட்டி பரோட்டவுடன் சேர்த்துப் பரிமாறலாம்.
வேகவைத்த சாதம் - 2 கப்
பெரிய நெல்லிக்காய் -8 முதல் 10
காய்ந்த மிளகாய் - 4 (இரண்டாக நறுக்கிக் கொள்ளுங்கள்)
கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - 4 அல்லது 5 இலைகள்
மஞ்சள்த்தூள் - ஒரு சிட்டிகை
சீரகம் - 1 டீஸ்பூன்
தண்ணீரில் கழுவி சுத்தம் செய்த நெல்லிக்காயை ஈரம் போகத் துடைத்துக் கொள்ளுங்கள். நெல்லிக்காயின் சதைப்பகுதியைத் துருவி அல்லது சற்று பெரியதாக நறுக்கி, அதனை மிக்ஸியில் சேர்த்து சாறு எடுத்து தனியே வைத்துக் கொள்ளுங்கள்.
அடுப்பில் அடிப்பகுதி கனமான கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகு சேர்த்து பொரிந்து வரும்பொழுது சீரகம், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து கடலைப்பருப்பு பொன்னிறமாகும் வரை வதக்கவும். இதில் இஞ்சி சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, பெருங்காயம், நெல்லிக்காய் சாறு, மஞ்சள்த்தூள் சேர்த்து சாறு கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும். வேகவைத்த சாதத்தை, தேவையான அளவு சேர்த்துக் கிளறி அடுப்பு தீயை மிதமாக்கி இரண்டு நிமிடம் கழித்து இறக்கி அப்பளத்தோடு பரிமாறுங்கள்.
Post a Comment