40 வயதைக் கடந்த பெண்களுக்கு.....டாக்டர் ஃபேமிலி தரும் டிப்ஸ்...!
40 வயதைக் கடந்த பெண்களுக்கு.....டாக்டர் ஃபேமிலி தரும் டிப்ஸ்...! வயதானவர்களை அதிகம் பாதிக்கக்கூடியது, ஆஸ்டியோபொரோசிஸ் என்னும் எலும்பு...
வயதானவர்களை அதிகம் பாதிக்கக்கூடியது, ஆஸ்டியோபொரோசிஸ் என்னும் எலும்பு அடர்த்திக் குறைவு நோய். மாதவிடாய் நிற்கும் சமயத்தில், 45 வயதுக்கு மேல் உள்ள பெண்களையும், 60 வயதுக்கு மேல் உள்ள ஆண்களையும், இந்த நோய் அதிகம் பாதிக்கும். மது குடிப்பவர்கள், சிகரெட் புகைப்பவர்களுக்கு இந்த நோய் முன்கூட்டியே வரும் வாய்ப்பு அதிகம். டெக்ஸா ஸ்கேன் செய்துபார்த்தால் மட்டுமே இதன் பாதிப்பை அறியமுடியும். ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின் - டி அளவை வைத்தும், இந்த நோயைக் கண்டுபிடிக்க முடியும்.
40 வயதைக் கடந்த பெண்கள், வருடத்தில் மூன்று மாதங்களுக்கு கால்சியம் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். வைட்டமின் டி சத்துள்ள எள், கீரை வகைகள், பீட்ரூட், பாதாம், பிஸ்தா, முழு உளுந்து, பால் பொருட்கள், கடல் உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
காலை மற்றும் மாலை வெயிலில் வைட்டமின் டி அதிகம் இருப்பதால், அந்தச் சமயத்தில் வெளியில் வந்து உட்கார்ந்தால்கூட போதுமானது.
Post a Comment