கோடை காலப் பராமரிப்பு! கோடையை எதிர்கொள்வோம்!! குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஸ்பெஷல்!!
100 டிகிரிக்கும் மேலே கொளுத்தும் வெயிலைச் சமாளிக்க முடியாமல், ஆரோக்கியமானவர்களே தடுமாறும்போது, குழந்தைகளும் முதியவர்களும் எப்ப...

https://pettagum.blogspot.com/2015/05/blog-post_84.html
100
டிகிரிக்கும் மேலே கொளுத்தும் வெயிலைச் சமாளிக்க முடியாமல்,
ஆரோக்கியமானவர்களே தடுமாறும்போது, குழந்தைகளும் முதியவர்களும் எப்படி
வெப்பத்தின் உக்கிரத்தைத் தாங்குவார்கள்? வெயிலின் கடுமை, குழந்தைகளையும்
முதியவர்களையும் தாக்காத அளவுக்கு, அவர்களைப் பாதுகாக்க வேண்டும். உடை,
தண்ணீர், உணவு என்று எல்லா விஷயங்களிலுமே, வழக்கத்தைவிடக் கூடுதல் அக்கறை
எடுத்துக்கொள்வது, கோடை நோய்களிலிருந்து குழந்தைகளையும் முதியவர்களையும்
பாதுகாக்க உதவும்.
கோடை காலத்தில் குழந்தைகளைப் பராமரிப்பதற்கான
டிப்ஸ்களை, வயது வாரியாகத் தருகிறார், சென்னை குழந்தைகள் நல நிபுணர்
ப்ரியா சந்திரசேகர். முதியோருக்கான கோடைகால டிப்ஸ்களைத் தருகிறார்,
முதியோர் நல மருத்துவர் என்.லக்ஷ்மிபதி ரமேஷ்.
பச்சிளம் குழந்தை (0 - 5 மாதங்கள்)
6 மாதங்கள் முதல் 2 வயது
2 முதல் 5 வயது
6 முதல் 10 வயது
10 வயதுக்கு மேல்:
முதியோர் பாதுகாப்பு
தண்ணீர்... தண்ணீர்...
பருவ வயதில் இருந்து 60 வயதுக்கு
இடைபட்டவர்களுக்கு உடலில் 60 சதவிகிதம் தண்ணீர் இருக்கும். ஆனால்,
முதியவர்களுக்கு உடலின் சதைப்பகுதி, கொழுப்பாக மாறுவதால், 45-50
சதவிகிதம்தான் தண்ணீர் இருக்கும். வெயில் காலத்தில் தோல் வழியாகவும்,
மூச்சுவிடுவதன் வழியாகவும், மலம் வழியாகவும் கிட்டத்தட்ட 800 மி.லிக்கும்
அதிகமான தண்ணீர் உடலை விட்டு வெளியே போய்விடும். மேலும், சிறுநீர் வழியாக
1500 மி.லி. நீர் வெளியேறும். முதியவர்களுக்கு ஐந்து சதவிகிதம் தண்ணீர்
குறைந்தாலே, உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். நீர் வெளியேற்றத்தைச் சரிகட்ட,
அதிக தண்ணீர் அருந்துவது அவசியம்.
முதியவர்களுக்குத் தாகம் குறைவாகவே இருக்கும்.
எனினும், அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். கல்லீரல், சிறுநீரகம், இதயம்
நன்றாக இயங்கக்கூடிய முதியவர்கள் ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர்
கண்டிப்பாகக் குடிக்க வேண்டும். இதயக் கோளாறுகள், கல்லீரல், சிறுநீரகக்
கோளாறு உள்ளவர்கள், மருத்துவர் பரிந்துரைப்படி, ஒரு நாளைக்கு ஒன்றரை
லிட்டர் தண்ணீர் அருந்தினால் போதுமானது.
சோடியம் அத்தியாவசியம்
உடலுக்கு சோடியம் உப்பு அவசியம். பொதுவாக,
ரத்தத்தில் சோடியம் அளவு 135-145 இருக்க வேண்டும். வெயில் காலத்தில்
வியர்வை வழியாக சோடியம் உப்பு அதிகளவு வெளியேறிவிடும். முதியவர்களில்
பெரும்பான்மையினருக்கு ரத்த அழுத்தம், இதயப் பிரச்னைகள் காரணமாக, மிகக்
குறைந்த உப்பைச் சாப்பாட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டியிருக்கும். மருந்து,
மாத்திரைகள் சாப்பிடுவதால், சிறுநீர் வழியாக சோடியம் வெளியேறும். இதனால்,
முதியவர்களுக்கு சோடியம் அளவு குறைவாக இருக்கும்போது, ஹைப்போநட்ரீமியா
(Hyponatremia) எனும் பாதிப்பு ஏற்படும்.
சோடியம் 125-க்கு கீழ் குறையும்போது, அன்றாட
நடவடிக்கைகள் மாறும். மலச்சிக்கல் வரும், குறைவாகச் சாப்பிடுவார்கள்.
சோடியம் 115க்கு கீழ் குறைந்துவிட்டால் மனநிலை மாறுதல்கள் ஏற்படும். இந்த
அறிகுறிகள் இருந்தால், மற்ற பரிசோதனைகள் எடுப்பதற்கு முன்னர், சோடியம்
பரிசோதனை மூலமே, கண்டுபிடித்துவிட முடியும். வெயில் காலங்களில் ஒரு
நாளைக்கு நான்கு கிராம் அளவுக்கு, உப்பு எடுத்துக்கொள்வது நல்லது. ஆனால்,
ஊறுகாய், அப்பளம் போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
ஹீட் ஸ்ட்ரோக்
வெயில் காலங்களில் உடல் வெப்பம் 40 டிகிரி
செல்சியஸ் அல்லது 104 டிகிரி பாரன்ஹீட் அளவைவிட அதிகமானால்,
`ஹைபர்தெர்மியா' எனப்படும் `ஹீட் ஸ்ட்ரோக்' ஏற்படும். இந்த நிலையில்,
முதியவர்களுக்கு மனநிலைக் குழப்பம் தடுமாற்றமான பேச்சு இருக்கும், தோல்
வறட்சி ஏற்படும். வயிற்று வலி, வாந்தி போன்றவை வரும். தோலில் ஆங்காங்கே
சிவப்பு நிறத்திட்டுகள் உருவாகும், மூச்சுவிடுதலில் சிரமம் இருக்கும்.
இதயத் துடிப்பு சீராக இருக்காது. தசைப்பிடிப்பு ஏற்படும். எனவே, `ஹீட்
ஸ்ட்ரோக்' வராமல் தடுக்க, வெயில் காலங்களில் வெளியில் செல்வதை மிகவும்
குறைத்துக்கொள்ள வேண்டும். நிழலில் அல்லது குளிர்சாதன வசதி இருக்கும்
அறையில் இருப்பது நல்லது. நீர் அதிக அளவு அருந்த வேண்டும். `ஹீட்
ஸ்ட்ரோக்' அறிகுறிகள் இருந்தால், குடும்பத்தினர் முதியவர்களை டாக்டரிடம்
அழைத்துச் செல்ல வேண்டும். படுக்கையாகவே இருக்கும் முதியவர்களை, வெயில்
படும்படி ஜன்னல் அருகில் படுக்கவைக்க வேண்டாம்.
சிறுநீரகச் சிக்கல் தவிர்க்க
வெயில் காலத்தில் புற வெப்பத்தில் இருந்து
உடலைப் பாதுகாக்க, வியர்வை வழியாகத் தண்ணீர் அதிக அளவு வெளியாகும்
என்பதால், அடிக்கடி சிறுநீர் வராது. எனினும், பொதுவாகப் பெரியவர்கள் ஒரு
நாளைக்கு நான்கைந்து முறையும், முதியவர்கள் ஆறு முதல் எட்டு முறையும்
சிறுநீர் கழிக்க வேண்டியது அவசியம்.
முதியவர்கள் சிறுநீர் கழிப்பதில் சிரமம் இருந்தாலும், திடீரென சிறுநீர் கழிப்பது குறைந்தாலும், சிறுநீர் அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் வெளிவந்தாலும், உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது நல்லது. சிறுநீர் நன்றாக வெளியேற, தண்ணீர் அதிக அளவு அருந்த வேண்டும்.
தோல் பராமரிப்பு
வெயில் நேரத்தில் வெளியே போகும்போது,
சன்ஸ்கிரீன் லோஷன் தடவிக்கொண்டு செல்லுங்கள். முடிந்தவரை, காலை ஒன்பது
முதல் மாலை ஆறு மணி வரையில், வெயில் நேரத்தில் வெளியே தலை காட்டாதீர்கள்.
வைட்டமின் - டி குறைபாடு உள்ளவர்கள், காலை ஆறு முதல் எட்டு மணிக்குள்,
மிதமான சூரிய ஒளியில் உடற்பயிற்சி செய்துவிட்டு, வீட்டுக்குத்
திரும்பிவிடுங்கள்.
படுக்கை, தலையணை, ஆடைகளை அடிக்கடித் துவைப்பது அவசியம். வங்கி முதலான இடத்துக்கு அவசியம் செல்ல நேர்ந்தால், தலையில் தொப்பி அணிந்து செல்லுங்கள்.
படுக்கை, தலையணை, ஆடைகளை அடிக்கடித் துவைப்பது அவசியம். வங்கி முதலான இடத்துக்கு அவசியம் செல்ல நேர்ந்தால், தலையில் தொப்பி அணிந்து செல்லுங்கள்.
முழுக்கை சட்டை அணிந்து செல்லுங்கள். எப்போதும் கையில் 500 மி.லி அளவுகொண்ட தண்ணீர் பாட்டிலை வைத்திருங்கள். ஒரு நாளைக்கு இரண்டு முறை குளியுங்கள்.
பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. தடிமனான ஆடைகள்
வேண்டாம். மஞ்சள், வெள்ளை, ஆகாய நீலம், பச்சை என வெளிர் நிறங்களில் ஆடை
அணியுங்கள். இது, சூரியனிலிருந்து வெளிபடும் புற ஊதாக் கதிர்களால், சருமம்
பாதிப்புக்கு உள்ளாவதைத் தடுக்கும்.
கண்ணைக் கவனி
வெயில் நேரத்தில், விளையாடவோ உடற்பயிற்சி
செய்யவோ வேண்டாம். பகல் வேளையில் தரமான கூலிங்கிளாஸ் அணிந்து செல்லுங்கள்.
வெப்பக் காற்றால் வரும் தூசுகள், கண்களைப் பாதிக்காமல் இருக்கும்.
ரோட்டோரக் கடைகளில் விற்கப்படும், மலிவான கண்ணாடிகளை அணிய வேண்டாம். வெயில்
நேரத்தில் வெளியே சென்றுவிட்டு, வீட்டுக்குத் திரும்பியவுடன், கண்களை
நன்றாகத் தூய்மையான நீரால் கழுவுங்கள். கண்களுக்கு அடிக்கடி
ஓய்வுகொடுங்கள்.
உணவே மருந்து
முதியவர்கள், கோடை காலத்தில் உணவில் அதிக
அக்கறை செலுத்த வேண்டும். சூடான உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்த்து,
நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். பூசணிக்காய், வெள்ளரி,
சுரைக்காய், தர்பூசணி, இளநீர், நுங்கு ஆகியவற்றை உணவில்
சேர்த்துக்கொள்ளுங்கள்.
மணத்தக்காளி, வெந்தயக் கீரை, சிறுகீரை, முருங்கைக்கீரை என தினமும் ஒரு கீரை உணவில் அவசியம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
கொத்தமல்லி, புதினா போன்றவற்றைத் துவையலாகச்
செய்து சாப்பிடுங்கள். காபி, டீ, குளிர்பானங்கள், சர்க்கரை சேர்க்கப்பட்ட
ஃப்ரெஷ் ஜூஸ் போன்றவற்றை அருந்துவதைவிட, ஒரு நாளைக்கு நான்கு, ஐந்து முறை
நீர்மோர் அருந்துங்கள்.
அதிக அளவு பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
தாகத்தைத் தணிப்பதுடன், நோய் எதிர்ப்புச் சக்தியையும் உடலுக்குத் தரும்.
ஒரே வகையான உணவையே தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருக்காமல், தினமும்
விதவிதமான நிறத்தில் இருக்கும், பல்வேறு வகையான காய்கறிகளை, உணவில்
சேர்த்துக் கொள்ளுங்கள்.
குளிர்ச்சியைத் தரும் குளியல் முறைகள்
வெப்பம் தகிக்கும் போது, ஆறோ குளமோ இருந்தால்
கொஞ்ச நேரம் குளிக்கலாம் எனத் தோன்றும். இந்த நீர் நிலைகள் தரும்
புத்துணர்வை வீட்டிலேயே மேற்கொள்ளும் குளியல்முறைகளும் தரும். தகிக்கும்
கோடை வெப்பத்தால், நா வறண்டு போவது போல், உடலில் சருமமும் வறட்சியால்
பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். தினமும் இரண்டு முறை குளிப்பது ஒன்றே,
வறட்சியைப் போக்கும் வழி. கோடையை சமாளிப்பதற்கான ஆரோக்கியமான சிலவகைக்
குளியல் முறைகளை சொல்கிறார் சித்த மருத்துவர் பத்மப்ரியா.
ஆரோக்கியமான
அனைவருக்கும் ஏற்ற குளியல் முறைகள் இவை...
குளிப்பதை ஒரு தியானம் போல செய்ய வேண்டும்.
குளியல் அறைக்குள் நுழைந்ததும், தண்ணீரை எடுத்து தலையில் விட்டுக்
குளிக்கக்கூடாது. முதலில் கால் பகுதியில் தொடங்கவேண்டும். நீரை ஊற்றிக்
குளிக்கும்போது, அந்த உணர்வு மூளைவரைப் பாயும். இதனால், கொஞ்சம் கொஞ்சமாக
ஒவ்வொரு பாகத்துக்கும் தண்ணீரை ஏற்க உடல் தயார் ஆகும். இப்படிக்
குளிப்பதால், உடலில் இருக்கும், அதிகப்படியான வெப்பம் சீராக
வெளியேற்றப்பட்டு, உடல் குளிர்ச்சிபெறும். சளி, மூக்கடைப்பு வராது.
ஐஸ்கட்டி போன்ற குளிர்ந்த நீரில் குளிப்பதோ, அதிக சூடான நீரில் குளிப்பதோ
கூடாது. வெதுவெதுப்பான நீரே குளியலுக்கு ஏற்றது. ப்யூமிக் ஸ்டோன், நார்
பயன்படுத்திக் குளித்தால், சரும அழுக்கை எளிதில் அகற்றலாம்.
உடலின் வெளிப் பகுதியை இப்படிக் குளிர்விக்கிறோம். அதேபோல், உடலின் உள்உறுப்புகளின் அதிக வெப்பத்தை வெளியேற்ற, எண்ணெய் குளியல், வெந்தயக் குளியல், மூலிகைக் குளியல், மண் குளியல் உதவியாக இருக்கும். வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் போடுவது நல்லது.
உடலின் வெளிப் பகுதியை இப்படிக் குளிர்விக்கிறோம். அதேபோல், உடலின் உள்உறுப்புகளின் அதிக வெப்பத்தை வெளியேற்ற, எண்ணெய் குளியல், வெந்தயக் குளியல், மூலிகைக் குளியல், மண் குளியல் உதவியாக இருக்கும். வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் போடுவது நல்லது.
சுத்தப்படுத்தும் எண்ணெய் குளியல்
குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பு, உடல்
முழுவதும் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயைத் தடவி, நன்றாக ஊறவைக்க
வேண்டும். பிறகு, சீயக்காய் தேய்த்துக் குளிக்கலாம். வீட்டிலேயே சீயக்காய்
தயாரித்து, தேய்த்துக் குளிப்பதன் மூலம், சரும நோய்கள், முடி வளர்ச்சி,
பேன் பொடுகு நீங்கும். நரை முடியைத் தடுக்கும்.
சோர்வைப் போக்கும் அருகம்புல் குளியல்
நாட்டு மருந்துக் கடைகளில் அருகம் புல் தைலம்
கிடைக்கும். வீட்டிலேயே தயாரிக்க, அருகம்புல் சாறு 100 கிராம், தேங்காய்
எண்ணெய் 200 கிராம், அதிமதுரம் 10 கிராம் சேர்த்து, நன்றாக நீர் சுண்டக்
காய்ச்ச வேண்டும். இந்தத் தைலத்தை உடல் முழுவதும் தேய்த்து, 10 முதல் 15
நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். இதனால், பூஞ்சைத் தொற்றுப் பிரச்னை
சரியாகும். சருமம் பளபளப்பையும் மிருதுத் தன்மையையும் பெறும்.
செல்களைப் புதுப்பிக்கும் சூரணக் குளியல்
கார்போக அரிசி, ஆவாரம் பூ, கருஞ்சீரகம்,
கஸ்தூரி மஞ்சள், கசகசா, பூலான் கிழங்கு, சந்தனத் தூள், ரோஜா மொக்கு,
இவற்றைத் தலா 20 கிராம், பாசிப்பருப்பு 500 கிராம் எடுத்து, வெயிலில்
நன்றாகக் காயவைத்து, அரைத்துக் கொள்ளவும். இந்த பவுடரை தினமும் தண்ணீரில்
குழைத்துப் பூசி, குளித்துவர இறந்த செல்கள் உதிர்ந்து, புதிய செல்கள்
உருவாகும். பூஞ்சைத் தொற்று உள்ளிட்ட, சரும நோய்கள் அண்டாது.
குளிர்ச்சியாக இருக்கும்.
வியர்வை நாற்றத்தைப் போக்கும் நலங்கு மாவு
வெட்டிவேர், விளாமிச்சை வேர், கிச்சலிக் கிழங்கு, எலுமிச்சைத் தோல், கோரைக் கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், கார்போக அரிசி, பயத்தமாவு இவற்றை அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். தினமும், சோப்புக்குப் பதிலாக, இந்தப் பொடியைத் தேய்த்துக் குளிக்கலாம். வியர்வை நாற்றத்தைப் போக்கும். மாசு, மரு இல்லாமல் சருமம் பொலிவு அடையும்.
வெட்டிவேர், விளாமிச்சை வேர், கிச்சலிக் கிழங்கு, எலுமிச்சைத் தோல், கோரைக் கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், கார்போக அரிசி, பயத்தமாவு இவற்றை அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். தினமும், சோப்புக்குப் பதிலாக, இந்தப் பொடியைத் தேய்த்துக் குளிக்கலாம். வியர்வை நாற்றத்தைப் போக்கும். மாசு, மரு இல்லாமல் சருமம் பொலிவு அடையும்.
பருமன் உள்ளவர்களுக்கான பளிச் குளியல்
பச்சைப் பயறு, கொள்ளு, கறுப்புக் கொத்துக்
கடலையைச் சம அளவு எடுத்து, அதனுடன் வெந்தயம், துளசி தலா 100 கிராம்
சேர்த்து, ஆரஞ்சுத் தோல், எலுமிச்சைத் தோல், கருஞ்சீரகம் சிறிது அளவு
சேர்த்து, எல்லாவற்றையும் அரைத்து வைத்துக்கொண்டு, குளியல் போடலாம்.
சருமத்துக்கு நல்ல டோனிங் கிடைக்கும். தேவையற்ற தொங்கும் சதைகள் இறுகும்.
தொடைப் பகுதியில் அதிக வியர்வை வழிவது நிற்பதுடன், கொழுப்பும் கரையும்.
தேங்காய், நுங்கு, இளநீர் குளியல்
தேங்காய், நுங்கு, இளநீர் குளியல்
இளநீர், சருமத்துக்கான போர்வையாக இருக்கிறது.
பளிங்கு போன்ற பளபளப்பைத் தந்து, ஈரப்பதத்தைத் தக்கவைப்பதுடன், இளமையோடு
இருக்கவைக்கும். தேங்காய் வழுகலுடன், நுங்கு சேர்த்து, இளநீர் விட்டு
அரைத்துக்கொள்ளவும். நன்றாகக் குளித்தவுடன், அரைத்த விழுதை, உடல்
முழுவதும் பூசி, 10 நிமிடங்களுக்குப் பிறகு அலசலாம். சருமத்தினுள்
குளிர்ச்சி ஊடுருவி, புத்துணர்ச்சியைத் தரும். வெயிலில் போனாலும், சூரியக்
கதிர்கள் பாதிக்காத அளவுக்குச் சருமத்தில் குளிர்ச்சித் தேங்கி நிற்கும்.
சுத்தமாக்கும் உப்புக் குளியல்
உடல் சோர்வு, வலி, அதிக நீரிழப்பு இருந்தால்,
உப்புக் குளியல் உடனடி தீர்வைத் தரும். கடைகளில் கிடைக்கும் எப்சம் உப்பு,
சாதாரண உப்பு, பேக்கிங் சோடா மூன்றையும் குளிக்கும் தண்ணீரில் கலந்து அந்த
நீரில் குளிக்கலாம். சருமத்தில் உள்ள அழுக்கு, பூஞ்சைத் தொற்று நீங்கி,
உடல் சுத்தமாகும். கடைசியாக, எலுமிச்சைச் சாற்றைத் தண்ணீரில் கலந்து,
தலையில் விட்டுக்கொள்ளலாம்.
புத்துணர்ச்சித் தரும் மூலிகை குளியல்
கொதிக்கும் நீரில், புதினா, துளசி,
சிறுநீற்றுப் பச்சிலை, வெட்டிவேர், ரோஜா மொட்டு, சம்பங்கி, மல்லிகை, ஆவாரம்
பூ இவற்றைப் போட்டு, சிறிது நேரம் மூடிவிடவும். இந்த நீரில் குளித்தால்,
உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி கிடைத்து, உடல் நறுமணம் வீசும். பூக்களைப்
போட்டு குளிப்பது போல், திராட்சை, மாதுளம் பழம், சாத்துக்குடி போன்ற
பழங்களின் சாற்றைப் பயன்படுத்திக் குளிப்பதும், சருமத்துக்கு நல்ல
ஆரோக்கியத்தைத் தரும்.
நெல்லிக் குளியல்
ஆறு நெல்லிக்காயை, விதை நீக்கி
நறுக்கிக்கொள்ளவும். இதனுடன், இரண்டு டீஸ்பூன் வெந்தயம், கசகசா சேர்த்து,
தயிரில் ஊறவைத்து, அரைத்துக்கொள்ளவும். இந்த விழுதைக் குளிக்கும்போது
பயன்படுத்தலாம். ஏ.சி அறைக்குள் இருப்பது போன்று உடலை
ஜில்லென்றுவைத்திருக்கும்.
ரத்த ஓட்டத்துக்குக் களிமண் குளியல்
நாட்டு மருந்துக் கடைகளில் குளியலுக்கான களி
மண் கிடைக்கும். அதை வாங்கி, தண்ணீர் சேர்த்து, உடலில் பூசி, குறைந்தது அரை
மணி நேரம் ஊற வேண்டும். பிறகு குளிக்கலாம். இதனால், ரத்த ஓட்டம்
சீராகும். செல்கள் புதுப்பிக்கப்படும்.
குளிர்ச்சியான பானகங்கள்
கோடை வெப்பத்தினால் அடிக்கடி நா வறட்சி
ஏற்படும். அடிக்கடித் தண்ணீர் குடிப்பதுடன், சில சத்தான பானகத்தைச் செய்து
அருந்துவது, சோர்வை நீக்கி, சுறுசுறுப்பைத் தருவதுடன், உடலுக்குத்
தெம்பையும் கூட்டும். உடலைக் குளிரவைக்கும் சில பானகங்களை, சமையல் நிபுணர்
ஆர்.ராஜ்குமார் செய்து காட்டுகிறார்.
ஆவாரம் பூ டீ
தேவையானவை: ஆவாரம்பூ, ஆவாரம் பட்டை, பனை வெல்லம், ஏலக்காய்த் தூள்.
செய்முறை:
சிறிதளவு ஆவாரம் பூ மற்றும் ஆவாரம் பட்டையை எடுத்து, தண்ணீரில் போட்டு
நன்றாகக் கொதிக்கவைக்கவும். பிறகு, தேவையான அளவு வெல்லத்தைச் சேர்த்து,
இறக்குவதற்கு முன்பு, ஏலக்காய்த் தூள் சேர்த்து இறக்கவும். ஆவாரம் பூ அதிக
துவர்ப்புச் சுவைகொண்டது. எனவே, மிகக் குறைவாக சேர்த்துக்கொள்ளலாம்.
பலன்கள்: தாகத்தைத் தணிக்கும். வியர்வை துர்நாற்றத்தைப் போக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, இந்த டீ மிகவும் நல்லது. சர்க்கரையின் அளவைக் குறைத்து, ரத்தத்
தைச் சுத்தப்படுத்தும். உடல் சோர்வு நீங்கும். முகத்துக்குப் பொலிவைக் கொடுக்கும். ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக அளவு இருப்பதால், சருமம் சார்ந்த பிரச்னைகள் தீரும்.
பலன்கள்: தாகத்தைத் தணிக்கும். வியர்வை துர்நாற்றத்தைப் போக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, இந்த டீ மிகவும் நல்லது. சர்க்கரையின் அளவைக் குறைத்து, ரத்தத்
தைச் சுத்தப்படுத்தும். உடல் சோர்வு நீங்கும். முகத்துக்குப் பொலிவைக் கொடுக்கும். ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக அளவு இருப்பதால், சருமம் சார்ந்த பிரச்னைகள் தீரும்.
புதினா டீ
தேவையானவை: புதினா, ஏலக்காய் - சிறிதளவு, பனை வெல்லம் - தேவையான அளவு.
செய்முறை:
புதினா இலைகளைத் தண்ணீரில் கொதிக்கவைத்து, பனை வெல்லம் சேர்த்து,
இறக்குவதற்கு முன்பு, ஏலக்காய்த் தூளைச் சேர்க்கவும். நான்கைந்து புதினா
இலைகள் போதுமானது. அதிக அளவு சேர்த்தால், தொண்டையில் எரிச்சல் ஏற்படும்.
பலன்கள்:
வயிற்று வலியைக் கட்டுபடுத்தும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். முகம்
பொலிவுபெறும். பருக்கள், கட்டிகள் வராமல் காக்கும். ஜீரணத்துக்கு நல்லது.
துளசி டீ
தேவையானவை: துளசி, ஏலக்காய் - சிறிதளவு, பனை வெல்லம் - தேவையான அளவு.
செய்முறை: ஆவாரம் டீ போலவே இதையும் தயாரிக்க வேண்டும். ஆவாரம் பூ, பட்டை சேர்ப்பதற்குப் பதிலாக, துளசி இலையைச் சேர்த்துத் தயாரிக்கலாம்.
பலன்கள்: துளசியில் ஆக்சிஜன் அதிக அளவு இருப்பதால், உடலுக்கு மிகவும் நல்லது. அதிகமான வியர்வையைக் கட்டுபடுத்தும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். முகப்பொலிவுக் கூடும்.
பலன்கள்: துளசியில் ஆக்சிஜன் அதிக அளவு இருப்பதால், உடலுக்கு மிகவும் நல்லது. அதிகமான வியர்வையைக் கட்டுபடுத்தும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். முகப்பொலிவுக் கூடும்.
கற்றாழை ஜூஸ்
தேவையானவை:
கற்றாழைத் துண்டு - 50 கிராம், ஆரஞ்சு அல்லது திராட்சை (விதை நீக்கியது) -
100 கிராம், சர்க்கரை அல்லது பனங்கல்கண்டு - தேவையான அளவு.
செய்முறை: கற்றாழைத்
தோலை நீக்கி, வழு வழுப்பானப் பகுதியை நறுக்கி, தூய நீரில் நன்றாகக்
கழுவிக்கொள்ளவும். கற்றாழைத் துண்டுகளுடன் பழத்தைச் சேர்த்து, சர்க்கரை
சேர்த்து, நன்றாக மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். கற்றாழை ஜூஸ் ரெடி.
பலன்கள்:
கற்றாழையில் நிறைய வைட்டமின்கள் உள்ளன. கர்ப்பப்பையைக்
குளிர்ச்சியாக்கும். கோடையில், வைரஸ் தொற்று நோய்கள் அணுகாத அளவுக்கு நோய்
எதிர்ப்புச் சக்தியாக செயல்படும்.
நெல்லிக்காய் ஜூஸ்
தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - ஏழு, பனை வெல்லம் - தேவையான அளவு.
செய்முறை: பெரிய
நெல்லிக்காயில் விதையை நீக்கி, தோலைச் சீவிக்கொள்ளவும். இதனால்,
துவர்ப்புத் தன்மை இருக்காது. தோல் சீவக் கடினமாக இருந்தால், சிறிதளவு
நீரைக் கொதிக்கவைத்து, அதில் ,நெல்லிக்காயைப் போட்டுவைத்து எடுத்தால், தோல்
நீங்கிவிடும். இதனுடன், பனை வெல்லம் சேர்த்து, தண்ணீர் விட்டு, மிக்ஸியில்
போட்டு அரைத்துக்கொள்ளவும். குளிர்ச்சியான நெல்லிக்காய் ஜூஸ் தயார்.
பலன்கள்: நெல்லிக்காயில்
வைட்டமின் சி சத்து அதிகம் இருக்கிறது. சோர்வாக இருக்கும் போது பருகினால்,
உடலுக்கு நல்ல சக்தியைத் தரும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். வியர்வையை வெளியேற்றும்.
கேழ்வரகு முளைப்பால்
தேவையானவை: கேழ்வரகு - 250 கிராம், பனை வெல்லம் - 50 கிராம்.
செய்முறை:
நன்றாக முற்றி விளைந்த கேழ்வரகை ஊறவைத்து, தண்ணீரை வடிகட்டி,
முளைக்கவிடவும். முளைவிட்ட கேழ்வரகை மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். பிறகு,
ஒரு பருத்தித் துணியால் வடிகட்டிக்கொள்ள வேண்டும். வடிகட்டிய கேழ்வரகுப்
பாலுடன், பனை வெல்லம் சேர்த்து, நன்றாக அரைத்துக்கொள்ளவும். சுவையான
கேழ்வரகு முளைப்பால் தயார்.
பலன்கள்:
கேழ்வரகில் வைட்டமின் டி, இரும்பு, கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள்
நிறைந்து இருப்பதால், உடலுக்கு மிகவும் ஏற்றது. உடல் உஷ்ணத்தைப் போக்கி,
நல்ல குளிர்ச்சியைத் தரும்.
Post a Comment