ஏகாந்தமான இரவுத் தூக்கத்தை வரவழைக்க, சில வழிகள் உண்டு!

டவுட் கார்னர்   கவுதம்தாஸ் நரம்பியல் மனநல மருத்துவர் “எ னக்கு வயது 21. கல்லூரியில் படிக்கிறேன். நான் தினமும் காலையில் சீக்கி...

டவுட் கார்னர்
 கவுதம்தாஸ்
நரம்பியல் மனநல மருத்துவர்
“எனக்கு வயது 21. கல்லூரியில் படிக்கிறேன். நான் தினமும் காலையில் சீக்கிரம் எழுந்திருக்க நினைத்தாலும், முடியவில்லை. இரவு இரண்டு மணி வரைகூட என்னால் விழித்திருக்க முடியும். ஆனால், காலை எட்டு மணிக்கு முன்னால் எழுந்திரிக்கவே முடியவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக இதே நிலைதான். இதில் இருந்து மீள்வது எப்படி?”

“இன்றைக்குப் பெரும்பாலானவர்கள் சந்திக்கும் பிரச்னையே இதுதான். தொலைக்காட்சி, கணினி, கைப்பேசி பயன்பாடு அதிகரித்தப் பிறகு, இரவுத் தூக்கம் தாமதம் ஆகிவிட்டது. உங்கள் பிரச்னைகளைப் பார்க்கும்போது, இன்சோம்னியா பிரச்னை இருக்க வாய்ப்பு உள்ளது. இரவு, படுக்கையில் படுத்தால் நீண்ட நேரத்துக்கு உறக்கம் வராமல் இருப்பது, அதிகாலையில் வெகு சீக்கிரமே விழிப்பு வருவது, அடிக்கடி திடுமென விழிப்பு வருவது ஆகியவை அனைத்துமே இன்சோம்னியாவின் அறிகுறிகள்தான்.

இன்சோம்னியா பிரச்னையால், வேலையில் கவனம் செலுத்த முடியாது. தலைவலி, அஜீரணக் கோளாறு ஏற்படலாம். ஹார்மோன்கள் சமச்சீரின்மை, பதற்றம், மன அழுத்தம் ஆகியவை வரும். இதற்கு மாத்திரை, மருந்துகள் மூலம் தீர்வு உண்டு என்றாலும், உங்கள் வாழ்க்கை முறையைச் சிறிதளவு மாற்றி அமைத்தாலே நல்ல பலன் கிடைக்கும்.

நமக்குள் உயிர் கடிகாரம் (Circadian rhythm) உள்ளது. இதனை முறைப்படுத்த, உங்கள் அன்றாட வேலை நேரத்தைச் சரியாகத் திட்டமிட வேண்டும். காலை ஆறு மணிக்கு எழ விரும்பினால், இரவு 10 மணிக்குப் படுக்கைக்குச் சென்றுவிட வேண்டும். பொதுவாக, ஏழெட்டு மணி நேரத் தூக்கம் அனைவருக்கும் அவசியம். ஏகாந்தமான இரவுத் தூக்கத்தை வரவழைக்க, சில வழிகள் உண்டு.
மாலையில், தளர்வான ஆடைகளை அணியுங்கள்.
இரவு ஏழு மணிக்குப் பிறகு காபி, டீ, சாக்லேட், கோலா பானங்களைத் தவிர்த்துவிடுங்கள். ஏழெட்டு மணிக்குள், இரவு உணவை முடித்துவிடுங்கள். வயிறு முட்ட சாப்பிட வேண்டாம். இரவு உணவில், எண்ணெய் அதிகம் சேர்க்காமல் இருப்பது நல்லது.
இரவு, படுக்கைக்குச் செல்லும் முன்பு, மிதமான வாக்கிங் செல்லலாம். அதன் பிறகு, சாதாரண நீரில் குளிக்கவும்.
உடல் நன்றாகச் சோர்வாகி, தூக்கம்வந்தால் மட்டுமே, படுக்கையறைக்குச் செல்ல வேண்டும். தூக்கம் வரவில்லை எனில், படுக்கையில் புரள வேண்டாம். மற்றொரு அறையில் புத்தகம் படிப்பது, மெல்லிசை கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடுங்கள்.
செல்போன் சைலண்ட் மோடில் இருக்கட்டும். அதிக சத்தத்தில் பாடல்கள் கேட்பதைத் தவிருங்கள்.
படுக்கையறையில் டி.வி இருந்தால் அணைத்துவிடுங்கள். பளீர் வெளிச்சம் வேண்டாம். மங்கலான வெளிச்சம் தரும் விளக்கைப் பொருத்துங்கள்.
இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பு, வெதுவெதுப்பான சூட்டில் அரை டம்ளர் பால் அருந்துங்கள். காலை நேரத்தில் செய்யும் யோகா முதலான மனதை ஒழுங்குபடுத்தும் பயிற்சிகள், இரவு நேரத் தூக்கத்தை எளிதில் வரவழைத்துவிடும்.
இந்தப் பழக்கத்தை கடைபிடித்தால் சில நாட்களிலேயே உங்கள் பிரச்னை சரியாகிவிடும். முன் தூங்கி முன் எழலாம்!
இவை எதுவுமே உங்களுக்கு பலனளிக்காத பட்சத்தில், நீங்கள் விரைந்து மருத்துவரை அணுகவும்.

Related

கால் பாத வெடிப்பு பிரச்சனைக்கு தீர்வு---ஹெல்த் ஸ்பெஷல்,

தரையைச் சுத்தம் செய்யப் பயன்படும் சோப் ஆயிலில் உள்ள கெமிக்கல், கால்களில் பட்டால் சிலருக்கு வெடிப்பு உண்டாகும். இதிலிருந்து விடுதலை பெற சில டிப்ஸ்! • ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை தோலால் பா...

சரும அழகிற்கு உதவும் வினிகர்.....அழகு குறிப்புகள்.,

சருமத்தின் அழகை பராமரிக்க உதவும் பொருட்களில் வினிகரும் ஒன்றாக உள்ளது. வினிரை சருமத்திற்கு பயன்படுத்தினால், முகம் பொலிவாததோடு, பருக்கள், வறட்சி, கரும்புள்ளிகள் போன்றவற்றை போக்கிவிடும். எனவே சருமத்தை...

செம்பருத்தி தரும் கூந்தல் பராமரிப்பு --- அழகு குறிப்புகள்.,

செம்பருத்தி இலையை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி பட்டுப்போன்று மென்மையாக மாறிவிடும். பளபளப்பு கூந்தலுக்கு ஷாம்பே கதியென்று கிடக்கும் பெண்கள், அதற்கு மாற்றாக செம்பருத்தியை பயன்படுத்...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Tuesday - Dec 3, 2024 1:21:40 AM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,088,492

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item