பதஞ்சலியின் ‘ஆம்லா ஜூஸுக்கு தடை! பாபா ராம்தேவுக்கு 'செக்'!! விஷமாகும் பதஞ்சலிபொருள் – பாபா ராம்தேவின் பித்தலாட்டம் அம்பலம்!!!
பாபா ராம்தேவின் பதஞ்சலிப் பொருள்களில், ஆயுர்வேத மருத்துவம் நிறைந்ததாகக் கூறப்பட்ட ’ஆம்லா ஜூஸ்’, ஆய்வகச் சோதனையில் தோற்று, பாதுகாப்பற்ற தய...

யோகா குரு, பாபா ராம்தேவின் பதஞ்சலி தயாரிப்புகளில், ‘ஆம்லா ஜூஸ்’ எனப்படும் நெல்லிக்காய் ஜூஸ் உணவு பாதுகாப்புச் சோதனையில் தோல்வியுற்றது. இதனால், பாதுகாப்பற்ற தயாரிப்பாகக் கருதப்பட்ட ‘ஆம்லா ஜூஸ்’ பல இடங்களிலும் விற்பனைக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. ராணுவ உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ராணுவ கேன்டீனில், முதல் கட்டமாக இதன் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
’இந்த ‘ஆம்லா ஜூஸ்’ மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள பானம் என்பதால், இதை மற்ற குளிர்பானங்களைச் சோதனைசெய்யும் அளவீடுகளுடன் ஒப்பிட்டு ஆய்வுசெய்வது முறையாகாது’ என பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், ’கொல்கத்தாவில் உள்ள மேற்குவங்க பொது சுகாதார ஆய்வகத்தின் முடிவின்படி, இந்தத் தயாரிப்பு உடல்நலத்துக்கு பாதுகாப்பற்றது’ என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அறிக்கையின்படி, பதஞ்சலியின் ‘ஆம்லா ஜூஸ்’ பாதுகாப்பற்றது. ஆனால், இந்தத் தயாரிப்பை ஆயுர்வேத அமைச்சகம் சோதிக்க வேண்டும் என பதஞ்சலி நிறுவனம் முறையிட்டுவருகிறது.
முன்னதாக, வட மாநிலங்களின் பல இடங்களில், பதஞ்சலி ஆட்டா நூடுல்ஸில் பூச்சிகள் நிறைந்துள்ளதாகவும், பதஞ்சலி நெய் மோசமான நிலையில் விற்பனை ஆவதாகவும் ஹரியானா, ஹரித்வார் போன்ற இடங்களில் புகார்கள் பதிவுசெய்யப்பட்டுவருகின்றன.
Post a Comment