மூக்குக்கு பப்பாளி பல்லுக்கு தக்காளி பால் வடியும் பழங்கள் எல்லாமே மருத்துவ குணங்கள் அடங்கியவை! உதாரணமாக பப்பாளியை எடுத்துக் கொள்ளுங்கள். ...

மூக்குக்கு பப்பாளி பல்லுக்கு தக்காளி
பால் வடியும் பழங்கள் எல்லாமே மருத்துவ குணங்கள் அடங்கியவை! உதாரணமாக பப்பாளியை எடுத்துக் கொள்ளுங்கள். அது கருச் சிதைவை ஏற்படுத்தும், கருத்தரிக்காது என்று சிலர் சொல்கின்றனர். இதில் கொஞ்சமும் உண்மையில்லை!
பப்பாளியை விஞ்ஞானிகள் `சத்துணவு வாரியம்' என்று அழைக்கின்றனர்! அந்தளவுக்கு இதில் சக்தி நிறைந்துள்ளது. பப்பாளியில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. மாலைக் கண் நோய்க்கு இந்தப் பழம் மிகச் சிறந்த நிவாரணி! தினமும் காலையோ அல்லது மாலையோ தொடர்ந்து 40 நாட்கள் 200 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்! பப்பாளி சாப்பிட்டவுடன் பால் சாப்பிடுவது நல்லது.
வாய், மூக்கு, உணவு மண்டலம், கழிவு மண்டலம் போன்ற பாகங்களில் உள்ள தோலின் திசுக்களில் பாதிப்பு இருந்தால் பப்பாளி சாப்பிட்டால் தீரும்!
சிறுநீர் போகும் குழாயில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு பப்பாளி நல்ல தீர்வு கொடுக்கும். எலும்பு வளர்ச்சியை அதிகப்படுத்தும். தோல் வறண்டு இருந்தால் தினமும் பப்பாளி சாப்பிட்டு வந்தால் பளபளப்பாக மாறும். பப்பாளியை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் இன்னும் நல்லது. உடல் சக்தி அதிகமாகும்.
ஏழைகளின் ஆப்பிள் தக்காளி என்பார்கள். உண்மைதான்! இன்றைக்கு அனைத்து மக்களாலும் பயன்படுத்தப்படும் முக்கிய பழமாக தக்காளி விளங்குகிறது. இதில் வைட்டமின் சி உள்ளதால் பச்சையாக சாப்பிடுவது மிகவும் நல்லது! மேலும் இதில் பயோட்டின் அதாவது வைட்டமின் `எச்' உள்ளதால் சக்தி அதிகம்.
பல் ஆட்டம், பல் ஈறுகள் வீங்குதல், பல்லில் ரத்தம் வரும் நோய்கள், நிமோனியா, டிப்திரியா, ஸ்கர்வி போன்ற நோய்களை தடுக்கும் ஆற்றல் தக்காளிக்கு உண்டு. பெரும்பாலும் மதிய வேளையில் தக் காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
எலுமிச்சம்பழத்தில் பல சத்துப் பொருட்கள் நிறைந் துள்ளன. வைட்டமின் சி சத்தும் அதிகமாக உள்ள தால் உஷ்ண வியாதிகள் சீக்கிரத்தில் குணமாகும். பித்தம் உள்ளவர்கள், கல்லீரல் பாதிக்கப்பட்டவர்கள், மண்ணீரலில் வீக்கம் உள்ளவர்கள் போன்றவர்கள் தினமும் எலுமிச்சை சாறு சாப்பிடுவது மிக நல்லது. சாறுடன் தேன் கலந்து காலையில் சாப்பிட்டால் அன்று முழுவதும் நீங்கள் சூப்பர் ஸ்டார் மாதிரி சுறுசுறு ஸ்டாரா மாறிடுவீங்க!
வீட்டில் தோட்டம் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக கொய்யா மரம் வைத்திருப்பார்கள். பொதுவாக எல்லா இடங்களிலும் வளரும் இதில் வைட்டமின் சி சக்தி அதிகமாக இருப்பதால் பல வியாதிகளை தடுக்கும் ஆற்றல் கொண்டது. மலம் இளக்கும் தன்மை, பல் வியாதிகள், டிப்தீரியா, நிமோனியா, ஸ்கர்வி போன்ற நோய்களுக்கு கொய்யா ஒரு நிவாரணி. மஞ்சள் நிறம் உள்ள கொய்யாபழத்தில் வைட்டமின் ஏ இருக்கும்!
பூஜையில் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் வாழைப்பழத்தில் மாவு சத்து அதிகமாக உள்ளது. இதில் பூவை, நேந்திரம், நாடு, கற்பூரம், ரஸ்தாளி, மலை, செவ்வாழை என பல வகைகள் உள்ளன. பொதுவாக வாழைப்பழத்தில் சர்க்கரைச் சத்தும், பி,டி,ஏ போன்ற வைட்டமின் சத்தும் குறைந்த அளவு உள்ளன. மலச்சிக்கல் உள்ளவர்கள் இரவு பூவன் பழமும், பாலும் சாப்பிடுவது நல்லது. அம்மை வியாதிக்கு பேயன் பழம் நல்லது.
அம்மை நோய்க்கும், உடல் உஷ்ணத்துக்கும் பச்சைப் பழம் நல்லது. மெலிந்தவர்கள் மற் றும் இதய நோய் உள்ளவர்கள் மலைப்பழம் சாப்பிடலாம். ரஸ்தாளி ஆரோக்கியத்தை கூட் டும். தேனில் வாழைப்பழத்தை ஊற வைத்து சாப்பிடும்போது பலன் அதிகமாக இருக்கும். நீரழிவு உள்ளவர்கள் அதிகமாக சாப்பிட வேண்டாம்!
அரேபியாவிலிருந்து திராட்சை வந்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். திராட்சையில் வைட்டமின் சி உள்ளது. அத்துடன் தாது உப்புகளும், புளிப்புச் சத்தும் அதிகமாக உள் ளன.
குறைவான ரத்த அழுத்தம், ரத்த சோகை, நரம்புத் தளர்ச்சி, குடல் புண், மூட்டு வலி, இடுப்புவலி, மஞ்சள் காமாலை நோய், புற்று நோய் ஆகியவைகளுக்கு திராட்சை ஒரு அரிய மருந்து. திராட்சையை தினமும் சாப்பிட்டு வந்தால் மாத்திரை சாப்பிடும் அவசியம் இருக்காது.
கோடை காலத்தில் இயற்கை மனிதனுக்கு கொடுத்த மிகச் சிறந்த பழம் தர்பூசணி. மேல் பகுதி பச்சையாக இருந்தாலும், உள்ளே சிவப்பாக நீர் நிறைந்து காணப்படும். தர் பூசணியில் உள்ள சாறு பல வியாதிகளைக் குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது. குறிப்பாக நீர்சுருக்கு, உடல் உஷ்ணம், கட்டி வருதல் போன்ற வியாதிகளுக்கு மிகவும் நல்லது. மதியம் சாப்பாட்டிற்கு பதில் தர்பூசணியை சாப்பிட்டால் உடலில் உள்ள கழிவுப் பொருட்கள் சுலபமாக வெளியேறும். குறிப்பாக தேவையற்ற அசுத்தங்கள் சிறுநீராக வெளியேறி விடும். அதிகமாக கொழுப்பு சத்து உள்ளவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், மஞ்சள் காமாலை தாக்கியவர்கள், ரத்தக்குழாய் அடைப்பு உள்ளவர்கள் தர்பூசணியை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.
சர்க்கரை சத்து அதிகமாக நிறைந்தது மாம்பழம். இது உடல் உஷ்ணத்தை கொடுக்கும் தன்மை வாய்ந்தது. இருந்தாலும் இதில் 75% நீரும், தாது உப்புகளும், வைட்டமின்களும் நிறைந்துள்ளன. செந்தூரா, பங்கனப்பள்ளி, மல்கோவா, பெங்களூரா, பீத்தர், காசாலட்டு என மாம்பழத்தில் பலவகை உண்டு. ரத்த அழுத்தம் உள்ளவர்கள், வயிற்றுப்புண் உள்ள வர்கள், வறண்ட தேகம் உள்ளவர்கள், சதைப் பிடிப்பு இல்லாதவர்கள், குழந்தைக்கு பால் கொடுக்க முடியாதவர்கள் மாம்பழத்தை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மாம்பழம் சாப்பிட்டால் பால் சாப்பிடவும். அல்லது எலுமிச்சை சாறு சாப்பிட்டாலும் நல்லது!

பழங்களிலேயே கலர்புல்லாய் மஞ்சள் கலந்த சிவப்பாக பார்க்க அழகாய் இருக்கும் பழம் ஆரஞ்சு. சுவையும் சூப்பராய் இருக்கும். முக்கால்வாசி தண்ணீரை கொண்ட இந்த பழத்தை சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி ஆகிவிடும். இது கிச்சிலி பழ வகையை சார்ந்தது. பற்கள், ஈறுகள், எலும்புகள், ஸ்கர்வி, புற்று நோய், எலும்புருக்கி நோய் போன்ற வியாதிகளுக்கு ஆரஞ்சு சாப்பிடுவது நல்லது. தொண்டையில் புற்று நோய் உள்ளவர்கள் ஆரஞ்சு பழத்தை அதிகமாக சாப்பிட்டால் குணமாகும்.
நாவற் பழம் மிகச் சிறந்த மருத்துவ குணம் கொண்டது. நாவல் மரத்தின் வேர், பட்டை, பூ, பழம் அனைத்தும் மருந்தாக பயன்படுகின்றன. சர்க்கரை சத்தை குறைக்கும் இன் சுலின் இதில் இருப்பதால் நீரழிவு நோயாளிகள் சாப்பிடலாம். மரத்தின் பட்டையும் நீரழி வுக்கு மருந்தாக பயன்படுகின்றன.
சப்போட்டா பழம் மற்ற பழ வகைகளில் இருந்து வித்தியாசமானது. அதன் தோல் அமைப்பு எந்த பழத்துக்கும் இல்லை. அதிக நீர் கலந்துள்ள இந்த பழத்தின் சத்து ரத்த விருத் தியடைய பயன்படுகிறது. ரத்தப் புற்று நோய்க்கு இது மிகவும் நல்லது. ரத்த சோகையை போக்கும். உடலின் கருமை நிறத்தை மாற்றும். வளரும் குழந்தைகளுக்கு சப்போர்ட்டா நல்ல `சப்போர்ட்'டாக இருக்கும்!
வைட்டமின் சி அதிகமாக உள்ள அன்னாசி பழத்தின் வெளி அமைப்பும், உள் அமைப்பும் சற்று வித்தியாசமானது. தொண்டைப் புற்று நோய் மற்றும் புற்று நோய்க்கு அன்னாசி சிறந்த நிவாரணி. பல், எலும்பு, தோல் வியாதி, ஸ்கர்வி நோய் போன்ற வியாதிகளுக்கு அன்னாசி நல்ல மருந்து. டிப்திரியா, நிமோனியா உள்ளவர்கள் 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
வைட்டமின் சி நிறைந்த மாதுளம் பழத்தில் ஜீரண உறுப்புகளை திறம்பட செயல்பட வைக்கும் ஆற்றல் உடையது. மலக்குடல், குடல் பகுதி, ஜீரண உறுப்புகள், சிறுநீரகம் முதலிய உறுப்புகளில் ஏதாவது பிரச்சினை என்றால் மாதுளம் பழம் சாப்பிடுவது நல்லது. இந்தப் பழத்தை மென்று சாப்பிடும்போது பல் வியாதிகள் குணம் அடையும். சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இந்த மாதுளையை மிக்ஸியில் அரைத்து நாள்தோறும் சாப்பிடலாம். மாதுளம் பழத்தின் தோலும் பேதிக்கு மருந்தாக பயன்படுகிறது.
நெல்லிக்கனியோடு ஒப்பிடும்போது ஆப்பிளில் சக்தி குறைவுதான். இது பல நோய்களை நீக்கும் ஆற்றல் பெற்றது. இது ஒரு குறிப்பிட்ட சீதோஷ்ண நிலையில்தான் வளரும். 30% தண்ணீரும் வைட்டமின் சி மற்றும் தாது உப்புகள் நிறைந்தது. ரத்தசோகை, சிறுநீரகக் கோளாறு, தோல் சுருக்கம், கண் மற்றும் பல் வியாதிகளை நீக்கும் தன்மை உடையது.
முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் சத்துக்களும், வைட்டமினும் நிறைந்த பழம். இதை சாப்பிட்டால் கண் நோய் வராமல் தடுக்கும். உடல் உஷ்ணத்தை தரக்கூடிய பழம். ஜீரண உறுப்புகளை சீராக்கும். சர்க்கரை சத்து அதிகமாக இருப்பதால் நீரழிவு நோயாளிகள் தவிர்க்கவும். தேனில் கலந்து பலாப்பழத்தை சாப்பிட்டால் சக்தி அதிகமாக கிடைக்கும்.
சீத்தாப்பழம் சர்க்கரை சத்து நிறைந்த பழம். உடல் வலிக்கும், குடல் புண்ணுக்கும் மிகவும் நல்லது. உடல் உஷ்ணத்தை போக்கும். வயிற்று வலிக்கு முக்கிய மருந்தாக பயன் படுகிறது.
ஆப்பிளை விட, ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் வைட்டமின் சி 20 மடங் கிலிருந்து 25 மடங்கு வரை அதிகமாக உள்ளது. பாஸ்பரஸ், கால்சியம், கார்போ ஹைட்ரேட், புரதச்சத்து, கொழுப்பு, நீர்ச்சத்து, இரும்புச்சத்து முதலியவை நெல்லிக்கனியில் அதிகமாக உள்ளன.
பல், ஈறு வியாதிகளுக்கு நல்ல மருந்து. எலும்பு, தாடை இவைகளுக்கு நல்லது. மலச்சிக் கல், நீர்ச்சுருக்கு, நீரழிவு, மூளைக் கோளாறு, இருதயநோய், காச நோய், ஆஸ்துமா, மூல நோய் போன்ற வியாதிகளுக்கு நெல்லிக்கனி சிறந்த நிவாரணி!
Post a Comment