ஆட்டுக்கால்ச்சுப்--உடலுக்கு வலிவு தரும் சூப்கள்
ஆட்டுக்கால்ச்சுப் வேக வைக்க **************** கால் - நாலு துண்டு தக்காளி - - அரை பழம் வெங்காயம் - ஒன்று மிளகு தூள் - கால் தேக்கரண்டி உ...

https://pettagum.blogspot.com/2011/09/blog-post_2715.html
ஆட்டுக்கால்ச்சுப்
வேக வைக்க
****************
கால் - நாலு துண்டு
தக்காளி - - அரை பழம்
வெங்காயம் - ஒன்று
மிளகு தூள் - கால் தேக்கரண்டி
உப்பு சிறிது
சீரக தூள் - ஒரு தேக்கரண்டி
கொத்து மல்லி தழை -சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - கால் தேக்கரண்டி
தனியா தூள் - அரை தேக்கரண்டி
தேங்காய் பவுடர் - ஒரு தேக்கரண்டி
தாளிக்க
***********
கரம் மசாலா துள் - ஒரு பின்ச்
நெய் - ஒரு தேக்கரண்டி
குக்கரில் காலை நன்கு தேய்ட்து கழுவி அதில் வேகவைக்க கொடுத்துள்ள மசாலாக்களை போட்டு 3 கப் தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும்.
குக்கரில் விசில் வரும் போது தீயை குறைத்து கொள்ளவும்.
வெந்ததும் அதில் தேங்காய் பவுடரை கரைத்து ஊற்றி கொதிக்க விடு .
கொதித்து இரக்கியதும் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்
.
குறிப்பு
**********
சின்ன குழந்தைகளாக இருந்தால் அதை வடித்து தாளிக்கவும்.
பெரிய குழந்தைகள், கர்பிணி பெண்கள், பிள்ளை பெற்றவர்கலுக்கு என்றால் அப்படியே வெந்த்ததில் தாளித்து சேர்க்கலாம்
ஆட்டு கால் குழதைகள் எழுந்து நிற்கும் போது ஆட்டு எலும்பு, அல்லது காலில் சுப் போட்டு கொடுத்தால் நன்கு வலுவடையும்.
பிள்ளை பெற்றவர்களுக்கும் ரொம்ப நல்லது, மூட்டு வலி உள்ளவர்களும் இதை குடிக்கலாம்.
Post a Comment