கொத்தமல்லி தொக்கு----சமையல் குறிப்பு
கொத்தமல்லி தொக்கு தேவையானவை பச்சைக் கொத்துமல்லி - 1 கட்டு வர மிளகாய் - 10 கடலைப்பருப்பு - 1 கப் உளுந்தம் பருப்பு - 1 கப் பூண்டு - 10 பல் ப...

https://pettagum.blogspot.com/2011/09/blog-post_7484.html
கொத்தமல்லி தொக்கு
தேவையானவை
பச்சைக் கொத்துமல்லி - 1 கட்டு
வர மிளகாய் - 10
கடலைப்பருப்பு - 1 கப்
உளுந்தம் பருப்பு - 1 கப்
பூண்டு - 10 பல்
புளி - சிறு உருண்டை
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - இரண்டு புளியங்கொட்டை அளவு
செய்முறை
* வர மிளகாய், கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு மூன்றையும் சிறிது எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.
* புளியையும், பெருங்காயத்தையும் தனித்தனியாக காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
* பச்சைக் கொத்துமல்லியை நன்றாக கழுவி எண்ணெய் விட்டு ஈரம் போக வதக்கவும்.
* வதக்கிய மல்லியுடன் பூண்டு சேர்த்து துவையல் மாதிரி நைசாக தண்ணீர்விடாமல் அரைத்துக் கொள்ளவும்.
* வறுத்த மிளகாய், கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, பொரித்த புளி, பெருங்காயம் இவற்றுடன் உப்பு சேர்த்து நைஸாக மிக்சியில் பொடி செய்து கொள்ளவும்.
* தூளானதும் அரைத்த மல்லியை சேர்த்து மிக்சியில் அரைத்து சிறிது நேரம் உலர வைத்து பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
* சூடான சாதத்தில் நெய்யுடன் சேர்த்து பருப்பு பொடி போல சாப்பிடலாம்.
உபயோகமான குறிப்பு
* இந்த தொக்கை பிரிட்ஜ்ஜில் வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.
* சூடான சாதத்தில் புரட்டி சாப்பிட சுவையாக இருப்பதால் கர்ப்பிணி பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் சாப்பிட ஏற்றது.
* குழம்பு வைக்க நேரமில்லாத நாட்களில் இந்த கொத்துமல்லி தொக்கு சேர்த்து சாதம் தயாரிக்கலாம்.
Post a Comment