கிராமத்து கறி குழம்பு--சமையல் குறிப்புகள்
கிராமத்து கறி குழம்பு தேவையான பொருட்கள் * 1. ஆட்டுகறி - 3/4 கிலோ * 2. வெங்காயம், பொடியாக நறுக்கியது - 1 (அ) சின்ன வெங்காயம் - 1...

https://pettagum.blogspot.com/2011/09/blog-post_4414.html
கிராமத்து கறி குழம்பு
தேவையான பொருட்கள்
* 1. ஆட்டுகறி - 3/4 கிலோ
* 2. வெங்காயம், பொடியாக நறுக்கியது - 1 (அ) சின்ன வெங்காயம் - 10
* 3. தக்காளி, பொடியாக நறுக்கியது - 1
* 4. கறிவேப்பிலை, கொத்தமல்லி
* 5. கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க
* 6. மிளகாய் வற்றல் - 10
* 7. தனியா - 1 மேஜைக்கரண்டி
* 8. மிளகு - 2 தேக்கரண்டி (விரும்பினால்)
* 9. பட்டை, லவங்கம்
* 10. கசகசா - 1 தேக்கரண்டி
* 11. ஏலக்காய் - 1 (விரும்பினால்)
* 12. தேங்காய், பொடியாக நறுக்கியது - 1/4 கப்
* 13. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
* 14. உப்பு
* 15. பூண்டு - 5 பல்
* 16. சோம்பு - 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)
செய்முறை
* கறியை தனியாக தண்ணீர் சிறிது விட்டு வேக விடவும்.
* கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய் வற்றல், தனியா, மிளகு எல்லாம் தனி தனியாக வறுத்து வைக்கவும்.
* இதில் பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு, கசகசா, தேங்காய் சேர்த்து நைசாக அரைக்கவும்.
* பாத்திரத்தில் 1 குழிக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.
* இதில் வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.
* நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
* பின் வேக வைத்த ஆடுக்கறியை அந்த தண்ணீருடன் தக்காளியுடன் சேர்க்கவும்.
* இதில் அரைத்த விழுது, மஞ்சள் தூள், தண்ணீர், உப்பு சேர்த்து எண்ணெய் திரண்டு வரும்வரை கொதிக்க விடவும்.
* கடைசியில் எண்ணெயில் வறுத்த கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து 2 நிமிடம் விட்டு எடுக்கவும்.
Post a Comment