காளிஃப்ளவர் மிளகு பெரட்டை -- சமையல் குறிப்பு
காளிஃப்ளவர் மிளகு பெரட்டை தேவையான பொருட்கள்: காலிஃப்ளவர் - 750 கிராம், சன்ஃப்ளவர் ஆயில் - 60 மில்லி, கடுகு - 1 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ...

காளிஃப்ளவர் மிளகு பெரட்டை
தேவையான பொருட்கள்: காலிஃப்ளவர் - 750 கிராம், சன்ஃப்ளவர் ஆயில் - 60 மில்லி, கடுகு - 1 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், உடைத்த வெள்ளை உளுந்து - 1 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - 2, தூளாக்கப்பட்ட மிளகு, கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காலிஃப்ளவர் துண்டுகளை சுத்தப்படுத்தி, வேக வைத்துக் தனியே எடுத்து வையுங்கள். பாத்திரத்தில் (பேன்) எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் மற்றும் உடைத்த வெள்ளை உளுந்து ஆகியவற்றைத் தாளியுங்கள். கடுகு பொரிய ஆரம்பித்ததும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் பொன்னிறம் ஆனதும் காலிஃப்ளவர், உப்பு, மிளகு சேருங்கள். மேற்கொண்டு இரண்டு நிமிடம் வரை வதக்கினால்... மணக்க மணக்க காலிஃப்ளவர் பெரட்டை தயார்!
Post a Comment