மொறு மொறு வாளை மீன் வறுவல்.--சமையல் குறிப்புகள்
மொறு மொறு வாளை மீன் வறுவல். தேவையான பொருட்கள் * வாளை மீன் - அரை கிலோ * எண்ணை - 100 மில்லி * சில்லி பவுடர் - 1 டீஸ்பூன் ...

https://pettagum.blogspot.com/2011/09/blog-post_9843.html
மொறு மொறு வாளை மீன் வறுவல்.
தேவையான பொருட்கள்
* வாளை மீன் - அரை கிலோ
* எண்ணை - 100 மில்லி
* சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்
* மிளகு பவுடர் - அரை ஸ்பூன்
* பூண்டு பல் தட்டிக்கொள்ள - 8 பல்.
* கோதுமை மாவு - 1 டீஸ்பூன்
* கடலை மாவு - 1டீஸ்பூன்
* அரிசி மாவு - 1 டீஸ்பூன்
* தயிர் - 1 டேபிள் ஸ்பூன்.
* உப்பு - தேவைக்கு.
* ரெட் கலர் - 1 பின்ச்
செய்முறை
* மீனை கழுவி சுத்தம் செய்து மஞ்சள் தூள்,உப்பு போட்டு அலசி வைக்கவும்.
* பின்பு மீனில் சில்லி பவுடர்,மிளகு பவுடர்,பூண்டு,உப்பு,ரெட் கலர்,தயிர்,அரிசி,கடலை,கோதுமை மாவு வகைகளை சேர்த்து பிசறி வைக்கவும்.
* அரைமணி நேரம் கழித்து நன்றாக காய்ந்த எண்ணையில் மொறு மொறுப்பாக பொரித்து எடுக்கவும்.
* ருசியான வாளை மீன் வறுவல் ரெடி.இதனை ஆனியன் ரிங்,கருவேப்பிலை போட்டு அலங்கரித்து பரிமாறலாம்.
குறிப்பு:
வாளை மீனில் முள் வாளை,பெல்ட் வாளை என்று உண்டு.பெல்ட் வாளை நடுமுள் மட்டும் இருக்கும்.வெள்ளை நிறமாக மெத்தென்று இருக்கும்.இதனை பயன்படுத்தினால் முள்பயம் இல்லாமல் சாப்பிடலாம்.
Post a Comment