போஹா வடை தேவையானவை: கெட்டி அவல் - அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று, வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - ஒரு கப், பச்சை மிளகாய் ...

போஹா வடை
தேவையானவை: கெட்டி அவல் - அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று, வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - ஒரு கப், பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - 3, நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, சீரகம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சுத்தப்படுத்திய அவலை கால் மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடிகட்டவும். இத்துடன் மசித்த உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு, சீரகம் சேர்த்து நன்றாகப் பிசையவும். இந்தக் கலவையை சிறு சிறு வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டு, பொன்னிறமாகப் பொரித்து எடுத்து, சூடாகப் பரிமாறவும்.
போஹா வடை: அவலுடன், பொடித்த பொட்டுக்கடலை மாவு அல்லது அரைத்த துவரம்பருப்பு மாவும் சேர்த்தால் வடை 'மொறுமொறு’ என்று ருசியாக இருக்கும்.
-----------------------------------------------------------------
Post a Comment