மும்மா ஸ்வீட் தேவையானவை: சோயா மாவு - ஒரு கப், மைதா மாவு - ஒன்றரை கப், முந்திரி மாவு கைப்பிடியளவு (முந்திரியை மிக்ஸியில் பொடித்த மாவு) - ஒர...

மும்மா ஸ்வீட்
தேவையானவை: சோயா மாவு - ஒரு கப், மைதா மாவு - ஒன்றரை கப், முந்திரி மாவு கைப்பிடியளவு (முந்திரியை மிக்ஸியில் பொடித்த மாவு) - ஒரு கப், சர்க்கரை- 3 கப், பால் - ஒரு கப், நெய் - ஒரு கப், எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை: பாலில் பாதியளவு சர்க்கரையை சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும். வாயகன்ற பாத்திரத்தில் சோயா மாவு, மைதா மாவு, முந்திரி மாவு சேர்த்து, நெய் விட்டு நன்கு பிசிறவும். பிறகு, சர்க்கரை சேர்த்த பால் விட்டு பூரி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். அரை மணி நேரத்துக்குப் பிறகு, மாவிலிருந்து பெரிய உருண்டைகளாக எடுத்து சப்பாத்தி போல உருட்டி... விரும்பிய வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும். மீதமுள்ள சர்க்கரையைப் பொடித்துக் கொள்ளவும்.
எண்ணெயைக் காய வைத்து, வெட்டி வைத்துள்ள துண்டுகளைப் போட்டு பொரித்து எடுக்கவும். உடனே அவற்றை பொடித்து வைத்துள்ள சர்க்கரையில் புரட்டி எடுத்து, தட்டில் வைத்து பரிமாறவும். இதை சில நாட்கள் வைத்திருந்தும் சாப்பிடலாம்.
மும்மா ஸ்வீட்: முந்திரி மாவுடன் கொஞ்சம் பொடித்த பாதாம் மாவும் சேர்த்தால் டேஸ்ட் சூப்பராக இருக்கும்.
Post a Comment