கொத்துக்கறி சப்பாத்தி---சமையல் குறிப்பு
கொத்துக்கறி சப்பாத்தி தேவையான பொருட்கள் கொத்துக்கறி - 1/4 கிலோ வெங்காயம் - 100 நறுக்கியது தக்காளி - 100 நறுக்கியது மஞ்சள்தூள் - 1/2 டீ ஸ்ப...

https://pettagum.blogspot.com/2011/09/blog-post_1817.html
கொத்துக்கறி சப்பாத்தி
தேவையான பொருட்கள்
கொத்துக்கறி - 1/4 கிலோ
வெங்காயம் - 100 நறுக்கியது
தக்காளி - 100 நறுக்கியது
மஞ்சள்தூள் - 1/2 டீ ஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீ ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீ ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீ ஸ்பூன்
சப்பாத்தி மாவு தனியாக பிசைந்து கொள்ளவும்.
செய்முறை
* கொத்துக்கறியை நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது இவைகளை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும்.
* வேக வைத்த கறியை இத்துடன் சேர்த்து தேவையான உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து புரட்டவும்.
* தொடர்ந்து கறி மசாலா சேர்த்து நன்கு வெந்து டிரை ஆனதும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
* சப்பாத்தி மாவை வட்டமாகத் திரட்டி, நடுவில் கொத்துக்கறியை வைத்து மடித்து தவாவில் போட்டு எடுக்கவும்.
குறிப்பு
* மாவின் நடுவில் கொத்துக்கறியை வைத்து தேங்காய் மூடிபோல் மூடி எண்ணெயிலும் பொரித்தெடுக்கலாம்.
* இதை சிலோன் பரோட்டா என்றும் சொல்வார்கள்.
*************************************************************************************
Post a Comment