ஓட்ஸ் வடை --- சமையல் குறிப்பு
ஓட்ஸ் வடை கால் கப் கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, இரண்டு காய்ந்த மிளகாய், கால் டீஸ்பூன் சோம்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர், உப்பு...
https://pettagum.blogspot.com/2011/09/blog-post_8260.html
ஓட்ஸ் வடை
கால் கப் கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, இரண்டு காய்ந்த மிளகாய், கால் டீஸ்பூன் சோம்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து அரைக்கவும். பிறகு, அரை கப் ஓட்ஸில் தண்ணீர் தெளித்து இதனுடன் சேர்த்துக் கலக்கவும். மாவை சிறுசிறு உருண்டைகளாக பிடித்து, வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும். இந்த வடைக்கு, தேங்காய் சட்னி சூப்பராக இருக்கும்.
கமென்ட்: கடலைப்பருப்புடன், உளுந்து, பாசிப்பருப்பு சேர்த்தால்... ஓட்ஸ் வடை இன்னும் சாஃப்டாக இருக்கும். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கொத்தமல்லி சேர்த்தால் மேலும் சுவையாக இருக்கும்.
Post a Comment