சமையல் குறிப்புகள்! சிம்பிள் சில்லி பரோட்டா
சிம்பிள் சில்லி பரோட்டா தேவையான பொருட்கள் * மைதா - 1 கப் (200 கிராம்), * பெரிய வெங்காயம் - 1, * குட மிளகாய் - 1, * மிளகாய் தூள் - 1 தேக்கர...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_1339.html
சிம்பிள் சில்லி பரோட்டா
தேவையான பொருட்கள்
* மைதா - 1 கப் (200 கிராம்),
* பெரிய வெங்காயம் - 1,
* குட மிளகாய் - 1,
* மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி,
* சோயா சாஸ் - 1 தேக்கரண்டி,
* தக்காளி சாஸ் - 3 தேக்கரண்டி,
* சிவப்பு கலர் கேசர் பவுடர் - 1/2 தேக்கரண்டி,
* இஞ்சி-பூண்டு விழுது - 1 தேக்கரண்டி,
* எண்ணெய் - 2 மேசைக்கரண்டி,
* சர்க்கரை - 1 தேக்கரண்டி,
* உப்பு - தேவையான அளவு.
செய்முறை
* வெங்காயம், குட மிளகாயை சது துண்டுகளாக நறுக்கி உதிர்த்து வைக்கவும்.
* மைதாவை சிறிது உப்பு, ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து, சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
* ரொம்ப மெலிதாகவோ, மொத்தமாகவோ இல்லாமல் சப்பாத்திகளாக தேய்த்து, நான்காக மடித்து தேய்த்து வைக்கவும்.
* தோசைக்கல்லை காய வைத்து, சப்பாத்திகளை சிவக்காமல், இருபுறமும் வெள்ளையாக இருப்பது போல் சுட்டு எடுக்கவும்.
* சுட்ட சப்பாத்திகளை சதுர துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், குட மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
* வதக்கும் போதே மிளகாய் தூள், சிவப்பு கலர் கேசரி பவுடர், சோயா சாஸ், தக்காளி சாஸ், சர்க்கரை, உப்பு சேர்த்து வதக்கவும்.
* நன்கு வதங்கியதும், நறுக்கிய சப்பாத்தி துண்டுகளை சேர்த்து, ஒரு கை தண்ணீர் தெளித்து, நன்கு கிளறி இறக்கவும்.
* சுலபமான, சுவையான சில்லி பரோட்டா ரெடி.
குறிப்பு:
தேவையானால் நறுக்கிய வெங்காய தாள், கொத்தமல்லி தழைகளை தூவலாம். மடித்து தேய்ப்பதால், பரோட்டா போல் அடுக்கடுக்காக
Post a Comment