சமையல் குறிப்புகள்! கோலா உருண்டை குழம்பு
கோலா உருண்டை குழம்பு தேவையான பொருட்கள்: மட்டன் கைமா - 200 கி வறுத்த கடலை பருப்பு - 50 கிராம் பச்சை மிளகாய் - 4 முந்திரி - 10 கிராம் கசகசா ...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_1745.html
கோலா உருண்டை குழம்பு
தேவையான பொருட்கள்:
மட்டன் கைமா - 200 கி
வறுத்த கடலை பருப்பு - 50 கிராம்
பச்சை மிளகாய் - 4
முந்திரி - 10 கிராம்
கசகசா - 10 கிராம்
சோம்பு - 2 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
பட்டை - 2 கிராம்
கொத்தமல்லி - அரை கட்டு
முட்டை - 1
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
குழம்பு செய்வதற்கு
புளி - 20 கிராம்
வெங்காயம் - 100 கி
தக்காளி - 50 கிராம்
பச்சைமிளகாய் - 3
தனியா தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 50 மில்லி
உப்பு - தேவைக்கேற்ப
பூண்டு - 10 கிராம்
இஞ்சி - 10 கிராம்
வெந்தயம் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 தழை
செய்முறை:
எல்லா கறிமாசாலாக்களையும் முக்கால் பாகம் மட்டனுடன் சேர்த்து வேக வைக்கவும்.
முந்திரி, கசகசாவை வறுத்து கடலைப்பருப்பு, பச்சைமிளகாய், கொத்தமல்லி, மிளகு, சோம்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். மட்டனையும் சேர்த்து அரைக்கவும். உப்பு சரியாக உள்ளதா என்று சரி பார்த்துக் கொள்ளவும்.
மீதி வேக வைக்காத மட்டனையும் சேர்க்கவும். சிறுசிறு உருண்டைகளாக்கவும்.
குழம்பு செய்வதற்கு:
வெங்காயம், தக்காளியை நறுக்கி, பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு விழுது செய்து புளியைக் கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயை சூடு செய்து வெந்தயம் கடுகு கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும். புளிக்கரைசலை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிடவும். குழம்பில் கோலா உருண்டைகளைச் சேர்த்து கொதிக்க வைக்கவும். கொத்தமல்லியை சேர்த்து அலங்கரிக்கவும்.
Post a Comment