சமையல் குறிப்புகள்! உலர்பழ உருண்டை

உன்னதமிக்க உலர் பழங்கள்! பழங்களில் உள்ள நீரை வற்ற வைத்து அவற்றை உலர் பழங்களாக்குவதானது `பிரிஜ்' இல்லாமல் அவற்றை பாதுகாக்க உதவுகின்றன. அ...

உன்னதமிக்க உலர் பழங்கள்! பழங்களில் உள்ள நீரை வற்ற வைத்து அவற்றை உலர் பழங்களாக்குவதானது `பிரிஜ்' இல்லாமல் அவற்றை பாதுகாக்க உதவுகின்றன. அவை நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கவும் உதவுகின்றன. சீசன்களில் மட்டும் கிடைக்கும் சீசனல் பழங்களை அவை கிடைக்காத காலங்களிலும் இம்முறையில் உலர் பழங்களாக சாப்பிட இயலும். புதிதாக பறித்த பழங்கள் அளவிற்கு நீர்ச்சத்து இல்லாவிடினும் மற்ற பழங்களைவிட, கலோரிகள் உலர் பழங்களுக்கு அதிகம். உலர் பழங்களின் சுவையும், மணமும் வெகு நாட்களுக்கு இருக்கும். சர்க்கரை சேர்க்காமலே இயற்கையான இனிப்பு இவற்றிற்கு இருக்கும் என்பதாலும் உலர் பழங்கள் மிகமிக உயர்வாக கருதப்படுகின்றன. `மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரியது' என்பதற்கேற்ப, அளவில் சிறியதான உலர் பழங்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தர வல்ல வைட்டமின்கள், மினரல்கள் நிறைந்தவை. உலர் பழங்கள் வெகு எளிதில் செரிமானமாகக் கூடியவை. மற்றும் ரத்த சுத்திகரிப்பு செய்யும் சக்தி வாய்ந்தவை. நோய்வாய்ப்பட்டு தேறிவருபவர்கள் உலர் பழங்கள் உண்டால் விரைவில் இயல்பான உடல்நலத்தை அடையலாம். உலர் பழங்களில் பொதிந்து நிறைந்துள்ள இயற்கை இனிப்பு சுவையானது. நாவிற்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் உகந்தது. தினந்தோறும் உலர் பழங்களை அளவாக உட்கொள்வதை பழக்கமாகக் கொண்டால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். உலர் பழங்கள் தோல் சுருக்கங்களை நீக்கி சருமத்தை பளபளக்க வைக்கும் சக்தி வாய்ந்தவை. மலச்சிக்கலை போக்க வல்லது. உலர் திராட்சை ஞாபகசக்தியை அதிகரித்து இதயத்திற்கு நன்மை விளைவிக்கக்கூடியது. வால்நட் எனர்ஜி தர வல்லது. முந்திரி புரதச்சத்து நிறைந்தது. வேர்க்கடலை நார்ச்சத்து மிகுந்தது. மினரல் சத்து நிறைந்தது பேரீச்சம்பழம். இவை அனைத்தையும் உபயோகித்து இம்முறை உலர் பழ உருண்டைகள் செய்து நம் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கொடுப்போமா...! உலர்பழ உருண்டை தேவையான பொருட்கள்: முந்திரி, பாதாம், உலர்திராட்சை, பிஸ்தா, வால்நட், தோலுரித்த வேர்க்கடலை சிறுதுண்டுகளாக நறுக்கியது - 1 கப் பேரீச்சம்பழம் நறுக்கியது - 1 கப் நெய் - 4 டேபிள் ஸ்பூன் ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன் செய்முறை: கனமான ஒரு வாணலியில் நெய் ஊற்றி அதில் நறுக்கிய பேரீச்சம் பழங்களைப் போட்டு மெல்லிய தீயில் கலவை ஒன்று சேர்ந்தாற்போல் வரும்வரை வதக்கவும். பொடியாக அரிந்த மற்ற உலர் பழங்களை ஒரு வாணலியில் மெல்லிய தீயில் சற்று வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுத்த உலர் பழங்களை பேரீச்சம் பழக்கலவையுடன் சேர்த்து ஏலக்காய்த்தூள் சேர்த்து ஒன்றாக சேர்ந்து வரும்வரை மெல்லிய தீயில் வதக்கவும். ஒரு தட்டில் நெய் தடவி வறுத்த உலர் பழக்கலவையை அதில் கொட்டவும். மிதமான சூடு இருக்கையிலே உலர் பழக்கலவையை சிறுசிறு உருண்டைகளாக்கி கெட்டியாகப் பிடித்து வைத்து பரிமாறவும். சுவைக்கான குறிப்பு தேவைப்படுவோர் உலர் பழ உருண்டைகளை கொப்பரைத் தேங்காய்த் துருவலில் போட்டு கிளறி எடுத்து வைக்கலாம். உலர் பழ உருண்டை, இயற்கை இனிப்பும், ஆரோக்கிய சுவையும் மிக்கது என்பது சரிதான்!

Related

சமையல் குறிப்புகள் 8917732041172828745

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item