கைமணம்! மூங்தால் சீரா
மூங்தால் சீரா தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், சர்க்கரை - ஒன்றரை கப், நெய் - ஒரு கப், சர்க்கரை சேர்க்காத கோவா - கால் கப், ஏலக்காய்த்தூள...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_3074.html
மூங்தால் சீரா
தேவையானவை:
பாசிப்பருப்பு - ஒரு கப், சர்க்கரை - ஒன்றரை கப், நெய் - ஒரு கப், சர்க்கரை சேர்க்காத கோவா - கால் கப், ஏலக்காய்த்தூள் -- அரை டீஸ்பூன், பாதாம், பிஸ்தா, முந்திரி - தலா 10.
செய்முறை:
பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, நீரை வடித்து, கரகரப்பாக அரைக்கவும். பாதாம், பிஸ்தா, முந்திரி ஊறவைத்து, தோலை உரித்து, மிக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். அடி கனமான கடாயில் கால் கப் நெய் ஊற்றி, அரைத்த பாசிப்பருப்பை சேர்த்துக் கிளறவும். பச்சை வாடை போய் நிறம் மாறியதும், சர்க்கரை சேர்த்துக் கிளறவும். அவ்வப்போது நெய் சேர்க்கவும். சர்க்கரை இளகி, மீண்டும் இறுகி வரும்போது, கோவா, ஏலக்காய்த்தூள், நறுக்கிய உலர் பருப்புகள் சேர்த்து, இறக்கி வைக்கவும்.
மூங்தால் சீரா: பாசிப்பருப்பை லேசாக வறுத்து ஊற வைத்தால் பச்சை வாடை வராது.
________________________________________
Post a Comment