சமையல் குறிப்புகள்! கடலைபருப்பு சட்னி
கடலைபருப்பு சட்னி தேவையான பொருட்கள்: பெரிய வெங்காயம் - 1 தக்காளி - 1 கடலைபருப்பு - இரண்டு தேக்கரண்டி காய்ந்த மிளகாய் - 4 உப்பு - தேவையான அ...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_3101.html
கடலைபருப்பு சட்னி
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
கடலைபருப்பு - இரண்டு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 4
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - ஒரு ஸ்பூன்
கடுகு - அரை தேக்கரண்டி
கருவேப்பிலை - ஒரு ஆர்க்கு
செய்முறை:
வாணலில் எண்ணெய் விட்டு காய்ந்தமிளகாய் கடுகு தாளித்து வெடித்ததும் கடலைபருப்பை சேர்த்து நன்றாக பொன்னிறம் வரும் வரை வறுக்கவும்
ஒன்றன் பின் ஒன்றாக வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் அதை ஆறவைத்து மிக்ஸ்யில் நைசாக அரக்கவும்.
அரைத்த சட்னியை வேறு பாத்திரத்தில் கொட்டி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பொடியாக நறுக்கிய கருவேப்பில்லை தூவவும்..
இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையான கடலைபருப்பு சட்னி ரெடி
Note:
கடுகு முன்பே சேர்த்து தாளிப்பதால் திரும்ப தாளிக்க வேண்டாம்
Post a Comment