கைமணம்! டேஸ்ட்டி எனர்ஜி பொரியல்
டேஸ்ட்டி எனர்ஜி பொரியல் தேவையானவை: முளை கட்டிய கொள்ளு - முக்கால் கப், வாழைக்காய் - 2 (அ) சௌசௌ - 2, தேங்காய் துருவல் - முக்கால் கப், பச்சைம...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_7263.html
டேஸ்ட்டி எனர்ஜி பொரியல்
தேவையானவை:
முளை கட்டிய கொள்ளு - முக்கால் கப், வாழைக்காய் - 2 (அ) சௌசௌ - 2, தேங்காய் துருவல் - முக்கால் கப், பச்சைமிளகாய் - 5, தேங்காய் எண்ணெய் - இரண்டரை டேபிள்ஸ்பூன், தூள் வெல்லம் - ஒரு கரண்டி, மஞ்சள்தூள் - சிறிதளவு, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கறிவேப்பிலை - முக்கால் டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
முளை கட்டிய கொள்ளை சிறிது தண்ணீர், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும். வாழைக்காயை தோல் சீவி, மெல்லிய துண்டுகளாக நறுக்கி, ஒரு கனமான பாத்திரத்தில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும். தேங்காய் துருவலுடன் பச்சைமிளகாய், சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
கடாயில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அதில் வேக வைத்த காய், வெல்லத்தூள், கொள்ளு, உப்பு, தேங்காய் விழுதைச் சேர்த்து 5 நிமிடம் கிளறவும். மீதி எண்ணெயை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
டேஸ்ட்டி எனர்ஜி பொரியல்: கொள்ளு மட்டுமில்லாமல், மற்ற எல்லா பயறிலும் இந்த பொரியல் செய்யலாம். சத்தும் கூடும்.
Post a Comment