சமையல் குறிப்புகள்! மட்டன் கோஃப்தா பிரியாணி

மட்டன் கோஃப்தா பிரியாணி இது தஞ்சாவூர் பகுதியில் பல வீடுகளில் செய்யபடும் மிகவும் பிரபலமான பிரியாணி ஆகும். கோஃப்தாவிற்கு: எலும்பில்லா திக்...

மட்டன் கோஃப்தா பிரியாணி இது தஞ்சாவூர் பகுதியில் பல வீடுகளில் செய்யபடும் மிகவும் பிரபலமான பிரியாணி ஆகும். கோஃப்தாவிற்கு: எலும்பில்லா திக்கான மட்டன் - 4 துண்டுகள் வெங்காயம் - சிறியதாக ஒன்று இஞ்சி, பூண்டு விழுது - அரை தேக்கரண்டி மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி கரம்மசாலாத்தூள் - கால் தேக்கரண்டி கார்ன் ஃப்ளார் - ஒரு தேக்கரண்டி எண்ணெய் - பொரித்தெடுக்க மல்லிதழை - சிறிதளவு பிரியாணிக்கு: அரிசி - ஒன்றரை டம்ளர் வெங்காயம் - இரண்டு தக்காளி - ஒன்று பச்சைமிளகாய் - ஒன்று இஞ்சி,பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி பிரியாணி மசாலா - ஒரு தேக்கரண்டி கரம் மசாலாத்தூள் - அரை தேக்கரண்டி தயிர் - மூன்று தேக்கரண்டி எலுமிச்சை பழம் - பாதியளவு மல்லி, புதினா தழை - சிறிதளவு நெய் - ஒரு தேக்கரண்டி தாளிக்க: எண்ணெய் - 50 மிலி பட்டை - சிறிய விரல் அளவு இரண்டு ஏலக்காய் - மூன்று கிராம்பு - இரண்டு பிரிஞ்சி இலை - பாதியளவு மட்டனை நன்கு சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை நறுக்கி வைத்துக் கொள்ளவும். பிரியாணி மசாலா தயார் செய்ய ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்னெய் ஊற்றி சூடு வந்ததும் தாளிக்க கொடுத்தவைகளை போட்டு பொரிந்ததும் நறுக்கின வெங்காயத்தை சேர்த்து சிறிது உப்பும் சேர்த்து நன்கு வதக்கவும். பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு பின் தக்காளி, பச்சைமிளகாயை சேர்த்து மசிய வதக்கவும். அவை வதங்குவதற்குள் கோஃப்தாவிற்கு தயார் செய்ய மட்டனை மிக்ஸியில் அரைத்து எடுத்து கொண்டு வெங்காயத்தையும் மல்லியையும் மிகவும் பொடியாக நறுக்கி சேர்த்து அதனுடன் இதர பொருட்களையும் சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும். பிறகு அவற்றை சிறு சிறு உருண்டைகளாக்கவும். தக்காளி வதங்கியவுடன் கரம் மசாலாவை தவிர்த்து மற்ற தூள்களை சேர்த்து நன்கு வதக்கி விட்டு தயிரும் மல்லி புதினாவில் முக்கால் பகுதியும் நறுக்கி சேர்த்து அதற்கு தேவையான உப்பையும் சேர்த்து நன்கு கிளறி மிதமான தீயிலேயே மூடியை போட்டு பச்சை வாசனை போக வதங்க விடவும். அதற்குள் மற்றொரு சிறிய வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடு வந்ததும் மிதமான தீயிலேயே கோஃப்தா உருண்டைகளை பொன்னிறமாக பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு நன்கு எண்ணெய் விட்டு பச்சை வாசனை இல்லாமல் மசாலா மணக்கும் போது அடுப்பை அணைத்து விட்டு எலுமிச்சை சாறை பிழிந்து கிளறி விட்டு பொரித்த உருண்டைகளையும் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி வைக்கவும். அதன் பின் அரிசியை கழுவி வைத்து விட்டு ஒரு பாத்திரத்தில் அரிசி வேக வைப்பதற்கான அளவு தண்ணீர் விட்டு அதற்கு தேவையான அளவு உப்பும் சேர்த்து கொதி வந்ததும், அரிசியை தண்ணீர் இல்லாமல் போட்டு முக்கால் பாகம் வேக வைத்து வடிக்கட்டி வைக்கவும். அடுத்து பாத்திரத்தில் வடிக்கட்டிய சாதத்தையும், மசாலாவையும் லேசாக கலந்து விட்டு மீதமுள்ள மல்லி புதினா தழையை பொடியாக அரிந்து தூவி கரம் மசாலாவையும் தூவி நெய்யும் சேர்த்து விரும்பினால் கலர் பவுடர் சிறு துளி ஒரு பக்கமாக போடவும். மூடியில் அலுமினிய ஃபாயில் போட்டு பாத்திரத்தை மூடி அடுப்பில் தம் போடும் ப்ளேட் வைத்து சூடு வந்ததும் இந்த பாத்திரத்தை வைத்து மூடியின் மேல் கனமான பொருளை வைத்து அடுப்பை குறைந்த தீயில் விட்டு பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் தம் போடவும். பிறகு மூடியைதிறந்து ஒரு முறை கிளறி விட்டு மூடி மீண்டும் ஐந்து நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். சுவையான மட்டன் கோஃப்தா பிரியாணி ரெடி. வெங்காயம், தயிர் ரைத்தாவோடு பரிமாறலாம். கோஃப்தாவிற்கு வெங்காயம் பொடியாக நறுக்க முடியவில்லை என்றால் அரைத்தும் சேர்க்கலாம். ஆனால் தண்ணீர் சேராமல் பார்த்து கொள்ளவும். மட்டன் துண்டாக இல்லாமல் கைமாவிலும் இதேபோல் அரைத்து செய்யலாம்.

Related

சமையல் குறிப்புகள் 675556167875837619

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item