சமையல் குறிப்புகள்! சுவையான குளிர்ச்சியான ஜிகர்தண்டா
ஜிகர்தண்டா கடல் பாசி - சிறிது (அ) பாதான் பிசின் - கால் தேக்கரண்டி சர்க்கரை - தேவைக்கு பால் - 3 கப் ரோஸ் (அ) நன்னாரி சிரப் - ஒரு மேசைக்கரண்...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_499.html
ஜிகர்தண்டா
கடல் பாசி - சிறிது (அ) பாதான் பிசின் - கால் தேக்கரண்டி
சர்க்கரை - தேவைக்கு
பால் - 3 கப்
ரோஸ் (அ) நன்னாரி சிரப் - ஒரு மேசைக்கரண்டி
ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு மேசைக்கரண்டி [விரும்பினால்]
ஐஸ்க்ரீம் - ஒரு ஸ்கூப்
நட்ஸ் - சிறிது பொடியாக நறுக்கியது [விரும்பினால்]
பாதாம் பிசின் பயன்படுத்தி செய்வதாக இருந்தால், பாதாம் பிசினை நன்றாக கழுவி நீரில் 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
கடல் பாசி கொண்டு செய்வதாக இருந்தால், கடல் பாசியை வழக்கம் போல் தயார் செய்து செட் ஆகும் போது கிளறி விடவும். அப்படி செய்து ஃப்ரிட்ஜில் வைத்தால் தூள் தூளாக வரும், நறுக்கும் வேலை இருக்காது. இதை ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
பாலை திக்காக காய்ச்சவும். இதனுடன் சர்க்கரை சேர்த்து கரைந்ததும் ஃபிரிட்ஜில் வைக்கவும்.
ஒரு கப்பில் ஒரு மேசைக்கரண்டி கடல் பாசி போடவும். அதன் மேல் ரோஸ் (அ) நன்னாரி சிரப் ஊற்றவும். மேலே ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்கவும்.
இதில் குளிர்ந்த பால் ஊற்றி, மேலே ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் போட்டு கொடுக்கவும்.
பாதாம் பிசின் என்றால் ஊற வைத்தது ஜெல்லி போல் மாறி படத்தில் உள்ளது போல் இருக்கும்.
கப்பில் ஊறிய பாதாம் பிசின் போட்டு அதன் மேல் நன்னாரி சிரப் ஊற்றவும்.
இதில் குளிர்ந்த பால் ஊற்றி, மேலே ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் போட்டு கொடுக்கவும். சுவையான குளிர்ச்சியான ஜிகர்தண்டா ரெடி.
கடல் பாசியில் ரோஸ் சிரப் சேர்த்து செய்தும் சேர்க்கலாம். விரும்பினால் ஜவ்வரிசியை ஊற வைத்து பாலில் வேக வைத்து சேர்க்கலாம். முந்திரி பாதாம் போன்றவை பொடியாக நறுக்கி சேர்க்கலாம். இன்னும் சுவை கூடும். கடல் பாசி, பாதாம் பிசின், நன்னாரி சிரப், ரோஸ் சிரப் அனைத்துமே உடலுக்கு குளிர்ச்சி தரும். கோடைக்கு ஏற்ற பானம்.
Post a Comment