அம்மா ரெசிபி! -- மூலிகை அடை -- அடை வகைகள்.,
'தினமும் வீட்டுல நாம சமைக்கிற உணவே சத்தானதாக இருக்கணும். அதுவும், வளர்ற குழந்தைங்களுக்கு ஆரோக்கியம் ரொ...
https://pettagum.blogspot.com/2013/09/blog-post_7482.html
'தினமும் வீட்டுல நாம சமைக்கிற உணவே சத்தானதாக
இருக்கணும். அதுவும், வளர்ற குழந்தைங்களுக்கு ஆரோக்கியம் ரொம்பவே
முக்கியம். 'ஐந்தில் வளையாதது ஐம்பதுல வளையாது’ன்னு சொல்வாங்க. அதனால் நல்ல
உணவு முறைகளை இப்பவே பழக்கப்படுத்திட்டோம்னா ஜங்க் ஃபுட்ஸ் பக்கமே போக
மாட்டாங்க'' என்று சென்னை போரூரைச் சேர்ந்த வாசகி எஸ்.கௌரி சுப்பிரமணியம்,
அசத்தலான மூலிகை அடை செய்யும் முறையை விளக்கினார்.
தேவையானவை: துளசி
இலை, வெற்றிலை, ஓமவல்லி இலை - தலா ஒரு கை பிடி, புழுங்கல் அரிசி - ஒரு
டம்ளர், பச்சை மிளகாய் - 2, சின்ன வெங்காயம் - 5, கடலைப் பருப்பு, உளுத்தம்
பருப்பு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு
- தேவையான அளவு.
செய்முறை:
புழுங்கல் அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து, நைஸாக அரைக்க
வேண்டும். துளசி, வெற்றிலை, ஓமவல்லி இலையை நன்கு பொடியாக அரிந்து கொள்ள
வேண்டும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய்விட்டு கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள்
சேர்த்து தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய் சேர்க்கவும். நறுக்கி வைத்துள்ள
மூலிகை இலைகளைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு அரைத்த மாவை சேர்த்து
நன்றாகப் பிசைந்து வைத்து கொள்ளவும். வாழை இலை அல்லது பிளாஸ்டிக் கவரில்
எண்ணெய் தொட்டு எலுமிச்சம் பழம் அளவு பிசைந்த மாவை எடுத்து மெல்லிதாகத்
தட்டி தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவும். இதை அப்படியே
சாப்பிடலாம். சுவையாக இருக்கும். தேவையெனில் தேங்காய் சட்னி
சேர்த்துக்கொள்ளலாம்.
ஊட்டச் சத்து நிபுணர் காந்திமதி:
''குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும், சளி, கபம்,
தொண்டைக்கட்டு போன்றவற்றுக்கு துளசி அல்லது ஓமவல்லிக் கஷாயம் செய்து
கொடுத்தால் குடிக்க மாட்டார்கள். இதுபோல ருசியான அடையாக செய்து கொடுத்தால்,
அடம் பிடிக்காமல் சாப்பிடுவார்கள்.
Post a Comment