இஞ்சி லேகியம் -- சமையல் குறிப்புகள்,
இஞ்சி லேகியம் என்னென்ன தேவை? பாதாம் பருப்பு - 10, வெல்லம் - 1 கப், இஞ்சி - 150 கிராம், நெய் - 1 டேபிள் ஸ்பூன், தனியா மற்றும் சீரகம் - தலா 1...
என்னென்ன தேவை?
பாதாம் பருப்பு - 10, வெல்லம் - 1 கப், இஞ்சி - 150 கிராம், நெய் - 1 டேபிள் ஸ்பூன், தனியா மற்றும் சீரகம் - தலா 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
பாதாம் பருப்பை ஊற வைத்துத் தோல் உரித்துக் கொள்ளவும். இஞ்சியைத் தோல் நீக்கி சுத்தம் செய்து வைக்கவும். தனியாவையும் சீரகத்தையும் அப்படியே மிக்சியில் நைசாக பொடிக்கவும். பிறகு அதில் பாதாம், இஞ்சி சேர்த்து, கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு மையாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு, வெல்லம் சேர்த்துக் கரைந்ததும், வடிகட்டவும். வெல்லப்பாகில் அரைத்த விழுது சேர்த்து, அடுப்பில் வைத்துக் கிளறவும். கலவை நன்கு கெட்டியாகி, திரண்டு வரும் போது, நெய் சேர்க்கவும். அல்வா பதம் வந்ததும் இறக்கவும். ஆறியதும், நெய் மேலே படியும். நெய் வேண்டாம் என்பவர்கள், அதை நீக்கி விட்டு சாப்பிடலாம். குழந்தைகளுக்கு நெய்யுடன் சேர்த்துக் கொடுக்கலாம்.
செரிமானத்துக்கு மிக நல்லது இந்த லேகியம். குறிப்பாக பண்டிகை நாள்களின் போது அஜீரணம் தவிர்க்க உதவும். கண்ணுக்குத் தெரிந்த கொழுப்பான நெய், கண்ணுக்குத் தெரியாத கொழுப்புள்ள பாதாம் என இரு கொழுப்புகளும் சேர்ந்தது இது.
Post a Comment