தேங்காயை நாம் எதற்க்கு எல்லாம் பயன்படுத்துகிறோம் என்று பார்த்தால் பொரியல்,குழம்பு,சட்டினி என்று as usual ஒரே மாதிரி தான்.ஆனால் கேரளாவ...
தேங்காயை நாம் எதற்க்கு எல்லாம் பயன்படுத்துகிறோம் என்று பார்த்தால் பொரியல்,குழம்பு,சட்டினி என்று as usual ஒரே மாதிரி தான்.ஆனால் கேரளாவில் உள்ள மக்களையும் – தேங்காயையும் பிரிக்க முடியாத அளவிற்க்கு அவர்கள் செய்யும் அனைத்து உணவிலும் தேங்காய் இருக்கும்.(உடனே மறுமொழியில் –கேரளாவில் தென்னை அதிகம் அதனால் வேறுவழியின்றி தேங்காயை பயன்படுத்துகிறார்கள் என்று சொல்லி விடாதிர்கள் எது எப்படியொ நமக்கு நல்ல உணவு கிடைத்தது என்ற சந்தோஷம்) சுவையான தேங்காய் (பால்) சூப் குழந்தை
முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த(பிடிக்கும்) ஒரு சூப் மட்டும்
அல்ல ஆரோக்கியமான பானம் என்று கூட செல்லலாம்.சாப்பிட அடம்பிடிக்கும்
குழந்தைக்கு இதை குடுத்து பாருங்கள் அதன் பலன் உங்களுக்கே தெரியவரும்,
பசியை தூண்டக்கூடிய ஒரு பானம்(அளவாக அருந்த வேண்டும்).சரி தேங்காய் சூப்
செய்ய தயாரா?
தேவையான பொருள்கள்:-
தேங்காய் பால் – 1 கப் (250-கிராம்)
பசும்பால் – 1 கப் (250-கிராம்)
பெரிய வெங்காயம் - 2 நறுக்கியது
பச்சைமிளகாய் – 5 நறுக்கியது
இஞ்சி – சிறிய நெல்லிக்காய் அளவு
கொத்தமல்லி தழை
எலுமிச்சை பழம் – பாதி பழம்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
சோள மாவு – 2 ஸ்பூன்
செய்முறை:-
தேங்காயை துருவி அதை மிக்சியில் அரைத்து பால் எடுத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்யை விட்டு வெங்காயத்தை நன்கு வதக்கவும்.
அதனுடன் பால், பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லி தழை, உப்பு
ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.
பின்பு கொதித்தவுடன் தேங்காய் பாலில் சிறிதளவு சோளமாவை
சேர்த்து கொத்தித்த கலவையுடன் ஊற்றவும்.
நன்கு கொதி வந்த பின்பு தேங்காய் பால் சூப்புக்கு
தேவையான அளவு உப்பு, மற்றும் எலுமிச்சை சாறு ஊற்றி இறக்கவும்.
சுவையான(பசியை தூண்டகூடிய)ஆரோக்கியமான தேங்காய் பால் சூப் தயார்.
Post a Comment