சீக்ரெட் ரெசிபி சாம்பார் பொடி -- பொடி வகைகள்,
என்னென்ன தேவை? துவரம்பருப்பு - அரை கப் கடலைப்பருப்பு - அரை கப் கொத்தமல்லி (தனியா) - ஒரு கப் மிளகாய் வற்றல் - 1 கப் மிளகு - 1 டேபிள்ஸ்பூன் ச...
துவரம்பருப்பு - அரை கப்
கடலைப்பருப்பு - அரை கப்
கொத்தமல்லி (தனியா) - ஒரு கப்
மிளகாய் வற்றல் - 1 கப்
மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - 1 சிறிய கட்டி
கறிவேப்பிலை - 2 ஈர்க்கு உலர்ந்தது.
எப்படிச் செய்வது?
வெறும் கடாயில் பெருங்காயத்தை பொரித்து பருப்பு வகைகளை வாசம் வரும் வரை வறுத்து வைக்கவும். மற்ற பொருள்களையும் வாசம் வரும்வரை வறுத்து பொடிக்கவும். இன்னொரு முறை: பெருங்காயத்தைதவிர அனைத்தும் வெயிலில் உலர வைத்தும், பெருங்காயத்தை கடாயில் பொரித்தும்
பொடிக்கலாம்.
Post a Comment