இடியாப்ப பிரியாணி செய்யும் முறை --- சமையல் குறிப்புகள்,
இடியாப்ப பிரியாணி தேவையான பொருட்கள் இடியாப்பம் – 12 – 15 வெங்காயம் – ஒன்று தக்காளி – ஒன்று கேரட் – ஒன்று பீன்ஸ் – 5 வேக வைத்த உருளைக்கி...
இடியாப்ப பிரியாணி
இடியாப்பம் – 12 – 15
வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
கேரட் – ஒன்று
பீன்ஸ் – 5
வேக வைத்த உருளைக்கிழங்கு – 2
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி, புதினா – சிறிது
பச்சை மிளகாய் – ஒன்று
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – ஒன்றரை மேசைக்கரண்டி
பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை –
தாளிக்க
சாம்பார் பொடி / மிளகாய் + தனியா கலவை – ஒரு தேக்கரண்டி
பிரியாணி மசாலா – ஒரு தேக்கரண்டி
தேங்காய் பால் – அரை கப்
உப்பு
செய்முறை:
இடியாப்பத்தை 4, 5 துண்டுகளாக உதிர்க்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்கவும். அதில் நீளமாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய கேரட், பீன்ஸ், கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும். காய்களுக்கு தேவையான உப்பு சேர்த்து, மூடி வேக விடவும். (நீர் தேவை இல்லை).
காய் வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து குழைய வதக்கி மூடி விடவும்.
பின் வேக வைத்து தோல் நீக்கி நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து பிரட்டி, தூள் வகைகள் சேர்த்து பிரட்டவும்.
பச்சை வாசம் போனதும் அரை கப் தேங்காய் பால் + கால் கப் நீர் விட்டு கொதிக்க விடவும். இடியாப்பத்தில் உப்பு இருக்கும். அதனால் மசாலா காய் கலவைக்கு மட்டும் உப்பு சரி பார்த்து தேவையெனில் சேர்க்கவும்.
கொதித்ததும் உதிர்த்த இடியாப்பம் சேர்த்து கலந்து விடவும்.
பிறகு சிறு தீயில் வைத்து ஆவி வெளியேறாமல் மூடி தம்மில் போடுவது போல் 15 – 30 நிமிடம் வரை போடவும். இடியாப்பம் நீரை முழுவதும் உறிந்துவிடும். அதனால் அடிக்கடி கிளற வேண்டும். இடியாப்பம் எவ்வளவு நீர் இழுக்கிறது என்பதை பார்த்து தேவைப்பட்டால் இன்னும் கால் கப் தேங்காய் பால் சேர்க்கலாம். (நான் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்த இடியாப்பம் சேர்த்தேன். முக்கால் கப் போதுமானதாக இருந்தது).
தூள் வாசம் போய் மசாலா இடியாப்பத்தில் நன்றாக ஊறி இருக்கும். சுவையான வெஜிடபுள் இடியாப்ப பிரியாணி தயார்.
Post a Comment