முருங்கைக்காய் தொக்கு --- சமையல் குறிப்புகள்,
தேவையானவை: முருங்கைக்காய்-5 புளி- 2 எலுமிச்சம்பழ அளவு மிளகாய்த்தூள்- 2 மேசைக்கரண்டி மஞ்சள் தூள்- அரை ஸ்பூன் வறுத்த வெந்தயம்- 1 ஸ்...
தேவையானவை:
முருங்கைக்காய்-5
புளி- 2 எலுமிச்சம்பழ அளவு
மிளகாய்த்தூள்- 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
வறுத்த வெந்தயம்- 1 ஸ்பூன்
பெருங்காயம் வறுத்தது- அரை நெல்லியளவு
நல்லெண்ணெய்- கால் கப்
தேவையான உப்பு
பொடியாக அரிந்த சின்ன வெங்காயம்- 1 1/2 கப்
செய்முறை:
புளியை 2 மணி நேரம் 2 கப் வெந்நீரில் ஊறவைத்து கெட்டியாக கரைக்கவும்.
சின்ன வெங்காயங்களைப் பொடியாக அரிந்து கொள்ளவும்.
முருங்கைக்காய்கலை சிறு சிறு துண்டுகளாக வெட்டி தண்ணீர் சேர்க்காமல் ஒரு பாத்திரத்தில் போட்டு குக்கரில் வைத்து 2 விசில் வரை வேக வைக்கவும்.
ஆறியதும் சதையை வழித்தெடுத்து சின்ன வெங்காயத்துடன் சேர்த்து வைத்துக்கொள்ளவும்.
வெந்தயத்தையும் பெருங்காயத்தையும் நன்றாக பொடி செய்து கொள்ளவும்.
வாணலியில் சூடாக்கி எண்ணெயை ஊற்றவும்.
அது சூடானதும் வெங்காய முருங்கைக்கலவையைப் போட்டு மிதமான தீயில் வெங்காய நெடி போகும் வரை வதக்கவும்.
கரைத்த புளித்தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.
கெட்டியாக வரும்போது மஞ்சள், மிளகாய்த்தூள்கள், உப்பு சேர்த்து சிறு தீயில் சமைக்கவும்.
நன்கு கெட்டியானதும் வெந்தயத்தூளைச் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்கள் சிறு தீயில் வைக்கவும்.
சுவையான முருங்கைக்காய்த்தொக்கு இப்போது தயார்!
அபாரமான சுவை!! இதை சாதத்திற்கும் தொட்டுக்கொள்ளலாம். சூடான சாதத்தில் நெய் ஊற்றி பிசைந்தும் சாப்பிடலாம். சூடான இட்லிக்கு தொட்டுக்கொள்ள அருமையான பக்க துணை!!
Post a Comment