கம்பு அடை --- அடை வகைகள்.,
...
தேவையானப் பொருள்கள்:
கம்பு மாவு-ஒரு கப்
சின்ன வெங்காயம்-7
பச்சை மிளகாய்-1
பெருஞ்சீரகப் பொடி-சிறிது
கொத்துமல்லி இலை-ஒரு கொத்து
கறிவேப்பிலை-ஒரு கொத்து
உப்பு-தேவைக்கு
நல்லெண்ணெய்-தேவையான அளவு
செய்முறை:
* வெங்காயம்,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை,கொத்துமல்லி இவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை,கொத்துமல்லி,பெருஞ்சீரகப் பொடி,உப்பு இவற்றைப் போட்டு பிசைந்துகொண்டு அதில் கம்புமாவை சேர்த்து நன்றாகப் பிசையவும்.
* பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்துப் சப்பாத்தி மாவு பதத்தைவிட கொஞ்சம் இறுக்கமாகப் பிசைந்துகொள்ளவும்.
* கைகளில் சிறிது எண்ணெய் தடவிக்கொண்டு மாவு முழுவதும் தடவி ஒரு 10 நிமிடத்திற்கு மூடி வைக்கவும்.
* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து பிசைந்து வைத்த மாவில் இருந்து ஒரு சிறு உருண்டை அளவு எடுத்து ஈரத்துணியின் மேல் வைத்து அடை போல் தட்டவும்.
* கல் காய்ந்ததும் கொஞ்சம் எண்ணெய் விட்டு அடையை எடுத்துப் போட்டு சுற்றிலும்,அடையின் மேலும் கொஞ்சம் எண்ணெய் விடவும்.
* ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபக்கம் வெந்ததும் எடுக்கவும்.
* இதற்கு எல்லா வகையான சட்னியும் பொருத்தமாக இருக்கும்.
Post a Comment