வாழைத்தண்டு கூட்டு இது மிகவும் சுவையாகவும் சத்துதானதாகவும்இருக்கும். உடல் நலத்தில் அக்கறையுடன் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரத்தில் ஒரு முறை உண்டால் உடம்புக்குமிகவும் நல்லது! குறிப்பாக ஆண் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது என்று என் பாட்டி கூறினார்கள். வாழைத்தண்டு உடம்பில் சேரும் கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது. சிறுநீரகத்திலும், கல்லீரலிலும் உண்டாகும் கல்லினைக் கரைக்கக்கூடிய வலிமை வாய்ந்தது சூடான சாதத்தில் நெய் விட்டு இந்த கூட்டு கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
தேவையான பொருள்கள்:
வாழைத் தண்டு – 1
பாசிப்பருப்பு – 200
பச்சை மிளகாய் – 5
வர மிளகாய் - 2
தக்காளி – 1 (நறுக்கியது)
சின்ன வெங்காயம் - 100 (நறுக்கியது)
பூண்டு - 5 பல்
சீரகம் - 1ஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
கடுகு, உளுந்தம்பருப்பு - தாளிக்க
எண்ணெய் – தேவையான அளவு
தேங்காய் - ஒரு மூடியில் பாதி
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை,கொத்தமல்லி தழை
செய்முறை:-
முதலில் வாழைத்தண்டில் உள்ள சில மேல் பகுதிகளை அகற்றி நடுவில் உள்ள தண்டை வட்ட வடிவமாக நறுக்கவும். நறுக்கும் போது நார் வரும். அதனை அகற்றி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். மோர் கலந்த நீரில் போட்டால் கருத்து போகாது.
ஒரு வாணலியில் பாசிப்பருப்பு மூழ்கும் அளவிற்கு தண்ணிர் ஊற்றி அதனுடன் மஞ்சள் தூள், சீரகம், எண்ணெய் ஒரு ஸ்பூன் சேர்த்து வேகவிடவும்.
பருப்பு
சிறிது வெந்தததும் அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு
சேர்த்து 5 நிமிடத்தில் நறுக்கிய வாழைத்தண்டை போட்டு அதனுடன் தேவையான அளவு
உப்பு சேர்த்து வேகவிடவும். வாழைத் தண்டு நன்கு வெந்தததும். அதனுடன்
தேங்காய் துருவல் சேர்க்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுந்தம்பருப்பு, பெருங்காயத்தூள், வர மிளகாய், கறிவேப்பிலை என அனைத்தையும் சேர்த்து தாளித்து வாழைத்தண்டு கலவையில் ஊற்றவும்.
ஒஒரு சேர கொதிக்கும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
மிகவும் சுவையான வாழைத்தண்டு கூட்டு தயார்
1 comment
தேங்காய் போடாமல் பண்ண முடியுமா ?
இன்னொரு கருத்து தேவை.
வீட்டு அல்லது காலனி தோட்டத்தில், சுற்றி வரும் பாதை ஓரத்தில் வைக்கும் செடிகளில், மருத்துவ குணம் வாய்ந்த அதாவது துளசி, ஆடுதொடா இலை போன்ற சில முக்கியமான செடிகள் என்ன ?
சுப்பு தாத்தா.
meenasury@gmail.com
www.subbuthatha72.blogspot.com
Post a Comment