அருமையான மருத்துவ உதவி அமைப்புகள்!!! -- உபயோகமான தகவல்கள்,

முதலில் ஒரு அருமையான மருத்துவ சிகிச்சை பற்றியும் ஒரு மருத்துவத் தொண்டு பற்றியும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இரு மாத இதழ்களில் இந்த ...

முதலில் ஒரு அருமையான மருத்துவ சிகிச்சை பற்றியும் ஒரு மருத்துவத் தொண்டு பற்றியும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இரு மாத இதழ்களில் இந்த விபரங்களைப்பற்றி படித்து அசந்து போன போது, இந்த விபரங்கள் நிறைய பேரைச் சென்றடைந்தால் அது எத்தனன பயனுள்ளதாக இருக்குமென்று தோன்றியதால் ஏற்பட்டதன் விளைவே இந்தப் பதிவு!  

இந்தியாவில் ஆண்டுக்கு 2.5 லட்சம் பேர்கள் சிறுநீரகப்பழுதினால் உயிரிழக்கிறார்கள். சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டால் வாழ்க்கையின் கடைசி நிமிடம் வரை சிகிச்சைகள் அவசியம். ஆனால் அந்த சிகிச்சைக்கு வசதியில்லாமலேயே பலர் உயிரிழக்கிறார்கள். இத்தைககய மக்களுக்காக தொடங்கப்பட்டது தான்  

THE TAMILNADU KIDNEY RESEARCH[TANKER] FOUNDATION,
17, wheatcrofts road, Chennai-34.
[PHONE NO: 044 2827 3407/28241635/044 4309 0998] 

பல நல்ல உள்ளங்கள் சேர்ந்து 20 வருடங்களுக்கு முன்பு இந்த அமைப்பைத் தொடங்கியிருக்கிறர்கள். சிறுநீரகப்பழுதின் கடைசிக் கட்ட சிகிச்சை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை. அதற்கு முந்தைய கட்டமான டயாலிஸிஸ் மனம், உடல் இரண்டையும் நோகடிக்கிற சிகிச்சை. வாரம் 2 அல்லது 3 தடவைகள் செய்ய வேண்டிய டயாலிஸிஸ் சிகிச்சையின் ஒரு முறை கட்டணமே ஆயிரம் முதல் 2500 வரை. இந்தத் தொண்டு நிறுவனம் தன் உறுப்பினர்களுக்கு அதை வெறும் 375 ரூபாயில் செய்து கொடுக்கிறது. மாதம் 2 டயாலிஸ்ஸை இலவசமாக செய்தும் தருகிறது. 6 டயாலிஸிஸ் மெஷின்களுடன் இது வரை ஒரு லட்சத்துக்கு மேல் டயாலிஸிஸ் செய்து முடித்திருக்கிறார்கள் இவர்கள். இவர்களின் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் முதல் வரியே ‘ வருமுன் காப்போம்’ என்பது தான்! சாப்பாட்டில் உப்பின் அளவைக் குறைப்பது, துரித உணவுகளைத் தவிர்ப்பது, காய்கறிகள், பழங்கள் என்று ஆரோக்கியமான உணவைத் தொடர்வது, டாய்லட் தேவைகள் வரும்போது அதை அடக்கி வைப்பதை நிறுத்துவது, டென்ஷன் தவிர்ப்பது, உடற்பயிற்சியைக் கட்டாயமாகத் தொடர்வது-இவையெல்லாம் இவர்களின் தாரக மந்திரங்கள்!!                                  

                        -------------------------------
 
HEALTH OPINION!

உள் நாட்டு நோயாளிகளுக்கு வழி காட்டுவது மட்டுமல்லாமல் வெளி நாட்டு வாழ் நோயாளிகளுக்கும் அவசர ஆலோசனைகள், உதவிகளைச் செய்கிறது இந்த நிறுவனம், அதுவும் கட்டணமில்லாமல்! 

இளைஞர்கள் சீனிவாசனும் கிருஷ்னகாயாவும் சப்தமில்லாமல் ஒரு அருமையான தொண்டை செய்து வருகிறார்கள்.  

எங்கேயோ ஒரு விபத்து நடக்கிறதா, சம்பவம் நடக்கும் இடத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் யாரேனும் துடித்துக்கொண்டிருகின்றார்களா-இவர்களை உடனேயே அழைத்தால் இவர்கள் அந்த இடத்திற்கு அருகிலுள்ள ஒரு நல்ல மருத்துவ மனையை உடனேயே பரிந்துரைக்கிறார்கள். இவர்கள் தருவது 24 மணி நேர சேவை என்பது மிகவும் பாராட்டத்தக்க அம்சம்! ஆரம்பித்த மூன்றே மாதங்களில் 40 வெளி நாட்டு நோயாளிகளுக்கும் 120 உள் நாட்டு நோயாளிகளுக்கும் வழி காட்டி சாதனை படைத்திருக்கிறார்கள்.

உடல் நலம் பாதிக்கப்பட்டால் எந்த மருத்துவ மனைக்குச் செல்வது, எந்த மருத்துவரைப்பார்ப்பது, எத்தனை செலவாகும், சென்னை அல்லது வேறு ஒரு நகரில் நோயாலிகளைச் சேர்க்க யார் உதவி செய்வார், நீண்ட நாட்கள் தங்கி ச்கிச்சை பெற வேண்டி வந்தால் யார் உதவியை நாடுவது-இத்தனை கேள்விகளுக்கும் ஒரே பதிலாக தங்கள் அமைப்பை பெருமையுடன் சொல்கிறது இந்த நிறுவனம்!! குழம்பியிருக்கும் நோயாளிக்கு சிக்கலைப் போக்கி நல்ல முடிவை வழிகாட்டுகிறது இந்த நிறுவனம்! மருத்துவ மனைகளை அமைக்கவும் இவர்கள் ஆலோசனைகள் தருகிறார்கள். இந்த அமைப்பு ஒரு வரப்பிரசாதம்!!  

இவர்களின் விலாசம்: 

FRONT ENDERS HEALTH CARE SERVICES PVT.LTD,
NEW NO:31[OLD NO:16], FLAT.NO:4, 3RD FLOOR,
EAST CIT NAGAR, 11 MAIN ROAD, NANDANAM,
CHENNAI-600035. PHONE: 044-2431 0050

Related

உபயோகமான தகவல்கள் 4696840540177790858

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Wednesday - Jan 22, 2025 12:08:13 PM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item