சேதுபந்தாசனம்--ஆசனம்
செய்முறை: விரிப்பில் மல்லாக்கபடுத்தவாறு, இரு கைகளையும் முழங்கையளவு மடக்குங்கள். உள்ளங்கையை முதுகில் வைத்து அழுத்தி தலையை தரையில் ஊன்றவு...

செய்முறை:
விரிப்பில் மல்லாக்கபடுத்தவாறு, இரு கைகளையும் முழங்கையளவு மடக்குங்கள். உள்ளங்கையை முதுகில் வைத்து அழுத்தி தலையை தரையில் ஊன்றவும். அதே சமயத்தில் நடுஉடலை வில் போல் வளையுங்கள். பாதம்-தலைப்பகுதி மட்டும் தரையில் படுமாறு வைத்து, உடலை பாலம் போல அமைக்கவும். இதே நிலையில் 15 விநாடிகள் இருந்து, பிறகு மறுபடியும் பழைய நிலைக்கு வரவும்.
பயன்கள்: கால், நரம்பு வலுப்பெறும். மூட்டுவலி, மூட்டு தேய்மானம் வராது. உடல்எடை குறையும். மார்பெலும்பு விரியும்.
Post a Comment