யோகாசனம் செய்யும்போது கவனிக்கப்பட வேண்டியவை---ஆசனம்

• நல்ல காற்றோட்டமான இடத்தை தேர்வு செய்யவும். • சூரிய உதயத்திற்கு முன்னே காலை வேளை மனதிற்கு மிகமிக நல்லது. காலை மெதுவான சூரிய ஒளியில் செய...

• நல்ல காற்றோட்டமான இடத்தை தேர்வு செய்யவும்.

• சூரிய உதயத்திற்கு முன்னே காலை வேளை மனதிற்கு மிகமிக நல்லது. காலை மெதுவான சூரிய ஒளியில் செய்தாலும் நல்ல பலன் உண்டு.

• யோகா செய்யும் போது வயிறு காலியாக இருக்கவேண்டும்.. எழுந்தவுடன் நிறைய குளிர் தண்ணீர் குடித்துவிட்டு அரைமணி நேரம் கழித்து காலைக்கடனை முடித்துவிட்டு செய்யலாம்

• வெறும் தரையில் செய்யக்கூடாது. தரையில் நல்ல மென்மையான விரிப்பை விரித்து அதன் மேல் செய்ய வேண்டும்

• வியர்வை அதிகம் வராது ஆதலால் உடை எந்த உடை ஆனாலும் பிரச்சனையில்லை. ஆனால் அதிகம் இறுக்காமல் தளர்ச்சியான மற்றும் யோகா செய்வதற்கு எளிதான உடை உடுத்திக்கொள்ளவும்.

• அவசர அவரசமாக செய்யக்கூடாது. மிக நிதானமாகவே செய்ய வேண்டும். அவசர வேலைகள் இருப்பினும் நிதானமாகவே குறைந்த நேரம் மிக முக்கிய ஆசனங்களை மட்டுமாவது செய்தால் மற்ற வேலைகளை சிறப்பாக செய்ய உத்வேகம் கிடைக்கும்.

• தனக்கு வராத ஆசனங்களை மிக கஷ்டப்பட்டு செய்ய முயற்சிக்கக்கூடாது. பழக பழக வந்துவிடும்.

•  யோகாசனம் செய்ய ஆரம்பிக்கும் முன் நாடி சுத்தி செய்து கொள்ளவும். 

• ஒவ்வொரு ஆசனத்திற்கு இடையிலும் நிதானமாக ஆழமாக மூச்சை இழுத்து விட்டு அடுத்த ஆசனத்தை தொடரலாம்.

• தியானம் செய்த பின் எவ்வாறு சாந்தியோகம் முக்கியமோ அதே போல யோகாசனம் செய்த பின் சவாசனம் மிக முக்கியமாக செய்யவும்.

• யோகாசனம் செய்யும் போது வியர்வை வரும் அளவிற்கு செய்யக்கூடாது. காலை சூரிய ஒளி பட்டு வருவது பிரச்சனையில்லை. நிதானமாக செய்வதே முக்கியம்.

• சில முக்கிய ஆசனங்கள் அதிக நேரம் பயிலக்கூடாது.

• பக்கத்தில் சுவர் அல்லது தூண் இருந்தால் அதன் துணையுடன் சிரசாசனம் செய்யலாம்.

•  செய்து முடித்தபின் கடின உணவானால் அரை மணி நேரம் கழித்தும் நீர் ஆகாரம் 15 நிமிடம் கழித்தும் உட்கொள்ளலாம்

• மது, புகை, டீ, காப்பி, அதிக காரம் உப்பு புளி, அசைவம் இவற்றை தவிர்க்கவும். உடனே விட்டுவிடவேண்டும் என்ற அவசியமில்லை. கொஞ்சம் கொஞ்சமாக குறைத்தால் போதுமானது.

•  உடல் நோய் இருப்பின் அந்த நோய்க்கான யோகப்பயிற்சியை அதிக முனைப்புடன் செய்யவும்.

•  மூளையை அதிகம் உபயோகித்து வேலை செய்பவர்கள் சிரசாசனம், யோகமுத்ரா போன்ற ஆசனங்களை கொஞ்சம் அதிக நேரம் செய்தால் மூளை சுறுசுறுப்பாக நாள் முழுவதும் இயங்கும்.

•  ரொம்ப நேரம் கண்விழித்து வேலை செய்தவர்கள் 1 நிமிடம் சிரசாசனம் செய்துவிட்டு படுத்தால் நல்ல தூக்கம் வரும்.

• இரவில் தூக்கம் வராதவர்கள் குளித்துவிட்டு யோகநித்திரை பயிற்சியை மேற்கொள்ளலாம்.

•  பெண்கள் மாதவிடாய் காலங்களில் யோகாசனம் செய்ய வேண்டாம். தியானம் செய்வதற்கு தடை இல்லை.

• அதிக தலைவலி இருப்பின் யோகாசனம் செய்வதை தவிர்த்து சவாசனம் மற்றும் யோகநித்திரை செய்யவும்.

•  உடனே எழுந்து வேற வேலைகளுக்கு செல்ல வேண்டியவர்கள் சவாசனம் முழுவிழிப்புடன் செய்யவேண்டும். தூங்கிவிட வாய்ப்புள்ளது.    

• யோகாசனம் கூறப்பட்ட அதே முறைப்படி செய்தால்தான் பலன் கிடைக்கும் என்றில்லை. எந்த அளவு செய்கிறோமோ அந்த அளவு பலன் கண்டிப்பாக கிடைக்கும்.

• யோகாசனம் செய்யும் போது மனதில் கோபம், பொறாமை, கவலை இவற்றை அறவே ஒழித்துவிட்டு நல்ல தன்னம்பிக்கை எண்ணங்களை, சாதிக்க வேண்டியவைகளை நினைவுகூறலாம்.. அல்லது அமைதியான இசையை கேட்கலாம்..

•  யோகாசனத்தை செய்வோர்கள் ஒரே காலகட்டங்களில் கடின உடற்பயிற்சியை கண்டிப்பாக செய்யக்கூடாது. யோகா செய்து உடல் வளையும் தன்மை கொண்டிருக்கும் நேரத்தில் கடின உடற்பயிற்சி செய்தால் உடல் சுழுக்கிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

•  ஒவ்வொரு ஆசனத்திற்குமான மாற்று ஆசனம் செய்தால் அந்த ஆசத்திற்கான முழு பலன் கிடைக்கும்

•  கடினமான ஆசனங்களை ஆசிரியர் உதவியுடன் மட்டும் செய்யவும்.    

• யோகாசனம் மனித உடலுக்கும் உள்ளத்திற்குமானது. இதில் மதப்பாகுபாடு கூடாது.

Related

ஆசனம் 9097336801462989881

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item