இது கையில் இருந்தால் கவலை வேண்டாம் -ஹோமியோபதி மருத்துவம்-
ஒரு இளைஞர் எம்.இ. முடித்து உள்ளார். நல்ல படிப்பாளி. பார்ப்பதற்கும் நன்றாக இருப்பார். அவருக்கு இதுவரை மூன்று முறை வெளிநாடு செல்ல இன்டர்விய...

உயர் பதவி வகிக்கும் ஒரு பெண்மணி. அவர் உடல் மெலிந்து மிகவும் மனம் சோர்ந்த நிலையில் என்னிடம் வந்தார். தமக்குக் கடந்த ஐந்து வருடங்களாக கடுமையாக ஒரு பக்கத் தலைவலியும் மற்றும் Irritable Bowl Syndrom (IBS) என்ற வயிற்றுக் கோளாறும் இருப்பதால் சரியாகப் பணியாற்ற முடியவில்லை என்றார். அவருக்கும் அர்ஜண்டம் நைட்ரிகம் கொடுத்து வந்தேன். தலைவலி மற்றும் வயிற்றுக் கோளாறு முற்றிலும் சரியானது. உடல் எடையும் கூடியது. புதுப் பொலிவுடன் உற்சாகமாகத் தனது பணியைச் செய்து கொண்டிருக்கிறார்.
அர்ஜண்டம் நைட்ரிகம் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். அது உங்களுக்கு உற்ற நண்பனாக இருக்கும்.
இது வெள்ளியில் (Silver) இருந்து வீரியப்படுத்தப்பட்டு தயாரிக்கப்படும் ஒரு அற்புதமான மருந்து. மனம், நரம்பு மண்டலம் செரிமான உறுப்புகளில் சிறப்பாக வேலை செய்கிறது. சிலர் ஒல்லியான, மெலிந்த சரீரவாகுடன் மிகவும் இளைத்துக் காணப்படுவார்கள். சிலருக்கு நரம்புமண்டலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் ஞாபகசக்தி குறைவு, பயம், கவலை மற்றும் நூதனமான மன எண்ணங்கள் தோன்றும். தனக்கு ஆபத்தான வியாதி வந்து விடும் எனப் பயப்படுவார்கள். ஒரு பாலத்தை கடக்கும்போது "ஆற்றிலே விழுந்து விடுவோம்" என்றும் பயப்படுவார்கள். சில சமயம் பயத்தில் அப்படியே குதித்தும் விடுவார்கள். மாடியில் இருந்து ஜன்னல் வழியாக பார்க்கும்போது ஒரு பய உணர்வு தோன்றும்.
1. மன நோயைப் போக்கும்
மனக் குழப்பம், விஷயங்களைப் புரிந்து கொள்வதில், உணர்ந்து கொள்வதில் குழப்பம் ஏற்படுவதால், தூரம், உயரம் போன்றவற்றைக் கணிப்பதில் தவறுகள் ஏற்படும். இது வாகனம் ஓட்டும்போது விபத்து மற்றும் பல கோளாறுகளுக்கு வழி வகுக்கிறது.
எதிலும் அவசரம், எதையும் வேக வேகமாகச் செய்வார்கள். வேக வேகமாக நடப்பார்கள். மனதிலும் வேகவேகமாக எண்ணங்கள் அடிக்கடி மாறும். இதனால் "நேரம் மிக மெதுவாகப் போவது போன்ற உணர்வு" ஏற்படலாம். இனிப்பு மற்றும் சர்க்கரை பிடிக்கும். இவற்றை விரும்பிய அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவார்கள். இப்படிப்பட்டவர்களின் மன நிலையை மாற்றி நல்ல குணம் தருகிறது இம்மருந்து.
2. உடல் பலவீனம்
உடல் பலவீனம், கை கால்களில் நடுக்கம், இவற்றுடன் காணப்படும் மயக்கம் மற்றும் கிறுகிறுப்பு முக்கிய அறிகுறியாகும். கண்களை மூடினால் கிறுகிறுப்பு. அதனால் கண்களை மூடிக் கொண்டு இவர்களால் சிறிது தூரம் கூட நடக்க முடியாது. இரவில் இருட்டில் தனியாக நடந்து செல்ல முடியாது.
தலைவலி
காதுகளில் இரைச்சலுடன் "ஞொய்" என்ற சப்தம். தலைவலி, தலையில் ஒரு பாதியில் (Hemicrania) மட்டும் ஏற்படும் அதிகமான வலி. குளிர், உடல் நடுக்கத்துடன் நெற்றிப் பொட்டில் வலி. வேலை செய்தால், மூளைக்கு வேலை கொடுத்தால் தலைவலி அதிகமாகும். தலைவலி வரும் போது தலை பெரிதாகிக் கொண்டே (Expanding) போவது போன்ற உணர்வு ஏற்படும். மண்டை ஓடு விரிவது போலவும், தெறித்து விடுவது போலவும் விசித்திரமான உணர்வு ஏற்படும். தலையை இறுக்கிக் கட்டினால் வலி குறையும்.
கண்வலி
கண்கள் சிவப்பாக மாறும், வீக்கம் மற்றும் கண்வலி, இமைகளில் வீக்கம், தடிப்பு மற்றும் வலி. சிவந்த சதை மாதிரிக் கண் ஓரம் துர்த்திக் கொண்டிருக்கும். வெளிச்சத்தைப் பார்க்க முடியாமல் கண் கூசும். கண்களில் இருந்து மஞ்சளாக ஒரு திரவம் வெளியாகும். கண் நோய்களை அர்ஜண்டம் நைட் குணப்படுத்தும். பிறந்த குழந்தைகள் கண்கள் திறவாமல் மூடிக் கொண்டிருப்பதற்கு (Opthalmia neonatarum) அர்ஜண்டம் நைட் அற்புத குணமளிக்கும்.
தொண்டைவலி
தொண்டையில் ஏதோ குச்சி சிக்கியிருப்பது போன்ற உணர்ச்சி இருக்கும். விழுங்கும்போதும் மூச்சு விட்டாலும் இந்த உணர்வு அதிகரிக்கும்.
அதிகமான தாகம், ஐஸ்கிரீம், குளிர்ந்தபானம் இனிப்பு சாப்பிட அதிக பிரியம் ஏற்படும். பசியின்மை, ஏப்பம், குமட்டல் மற்றும் பித்த வாந்தியுடன் வயிற்று வலி, வயிற்று உப்புசம், வலி மற்றும் இரைச்சலுடன் ஏற்படும் பச்சை நிறமான வயிற்றுப் போக்கு, சீதபேதி, இரத்தம் கலந்தும், பச்சையாகவும் போகும். வயிறு வெடித்துவிடுவது போல் வாயுவால் வயிற்று உப்புசம் ஏற்படும். மிகவும் கஷ்டப்பட்டு ஏப்பம் வரும்போது அதிக அளவு காற்று, வாய்வழியாக வெளியாகும்.
வயிற்றுப்போக்கு
முக்கிய இடங்களுக்கு, பரீட்சைக்கு நேர்முகத் தேர்வுக்குப் போக ஆயத்தம் ஆகும்போது பயத்தினால் ஏற்படும் வயிற்றுப் போக்கை அர்ஜண்டம் நைட் குணமாக்கும்.
தொண்டையில் புண், பாடகர்களுக்கு ஏற்படும் நீடித்த தொண்டைக் கரகரப்பு, உரத்த குரலில் பாடினால் இருமல், தொண்டையில் முடி (Hair) மாட்டிக்கொண்ட உணர்வுடன் ஏற்படும் இருமல், மூச்சு விடச் சிரமம், மார்பில் வலி மற்றும் படபடப்பு (Angina Pectoris) இவற்றையும் குணமாக்கும்.
காக்கை வலிப்பு
மன அமைதியின்மை, மனச் சோர்வுடன் உண்டாகும் காக்கை வலிப்பு மற்றும் பலவித வலிப்புக்களையும் குணமாக்கும்.
நரம்புத்தளர்ச்சி - வாதம்
முதுகுத் தண்டுக் கோளாறுகளால் (Spinal Problems) கால்களில் ஏற்படும் வாதம், கால் பலவீனம், நடுக்கம் மற்றும் தடுமாற்றம், கெண்டைக் கால் தசைகளில் பிடிப்பு மற்றும் வலி, பக்கவாதம் மற்றும் நரம்புத்தளர்ச்சிக்கு அர்ஜெண்டம் நைட் சிறந்த நிவாரணம் தரும். மனச்சோர்வால் தூக்கமின்மை, பயங்கரமான கனவுகள், கனவில் பாம்புகளை பார்த்தல், பயந்து திடீரென்று விழித்துக் கொள்ளுதல் போன்றவற்றிற்கும் அர்ஜெண்டம் நைட் நல்ல மருந்து.
பொதுவாக அர்ஜெண்டம் நைட் அனைத்து வியாதிக் குறிகளுக்கும் சாப்பிடலாம். மூடின அறையில், உஷ்ணமான அறையில், வலதுபுறம் படுப்பதால் அதிக இனிப்புச் சாப்பிடுவதால் சூடு அதிகமாகும்.
திறந்து வெளியில், குளிர்ந்த காற்று அமுக்குவதால் (Pressure) வியாதிக் குறிகள் குறையும்.
6 comments
எவ்வளவு மருந்து ஒரு நாளைக்கு எத்தனை தடவை எவ்வளவு நாட்களுக்கு சாப்பிடவேண்டும் என்று தெரிந்தால் நலம்.
தங்களின் கருத்துகளுக்கான விடை விரைவில் பதிவு செய்கின்றேன். நன்றியுடன் பெட்டகம் A.S.முஹம்மது அலி
இந்த பதிவில் உள்ள பெரும்பாலானவை என்னுடம் பொருந்துபவையாக உள்ளது. தங்கள் மருத்துவமனை முகவரி தந்தால் தங்களை சந்தித்து மேற்கண்ட மருந்தினை பெற்று பயனடைய வசதியாக இருக்கும்.
inthan marunthai yengu vaangalaam sagothararey
inthan marunthai yengu vaangalaam sagothararey
அன்புடையீர் ஹோமியோபதி மருந்துகள் கும்பகோணம் மூர்த்தி பகோலா ஹோமியோபதி பார்மசியில் அனைத்து மருந்துகளும் கிடைக்கும். அன்புடன் பெட்டகம் A.S. முஹம்மது அலி
Post a Comment